ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விடாமுயற்சிக்கு தயாராகும் அஜித்.. யாரும் எதிர்பார்க்காததை செய்யும் மகிழ்திருமேனி

ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் வெளியானது. இந்நிலையில் எப்போது விடாமுயற்சிக்கான படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.

அஜித் உலக சுற்றுலாவை முடிப்பதற்கு முன்பாகவே விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார். அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்காக முதற்கட்டமாக அஜித் ஹேர் கட் செய்துள்ளார்.

Also Read : விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டரை பற்றி வெளியான தகவல்.. யாரும் எதிர்பார்க்காத டபுள் ட்ரீட்!

இப்போது தலையில் கலர் அடிக்கலாமா அல்லது வெள்ளை முடியுடன் வேறு ஏதாவது கெட்டப் போடலாமா என்று யோசனையில் உள்ளார். துணிவு படத்தில் அவருடைய கெட்டப் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதேபோல் புதிய கெட்டப் ஒன்றை விடாமுயற்சி படத்திற்கு போடலாம் என்று அஜித் மகிழ்திருமேனிடம் கூறியுள்ளாராம்.

அதுவும் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். பல வருடங்கள் கழித்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் நடிப்பிலும் வித்தியாசமாக தெரிய வேண்டும், கெட்டப்பிலும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Also Read : டாப் ஆங்கிளிலிருந்து போட்டோ ஷூட் நடத்திய அனிகா.. அஜித்தின் ரீல் மகள் வர வர ரொம்ப மோசம்

ஆகையால் இதுவரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுள்ளார் அஜித். அதற்கு மகிழ்திருமேனியும் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யலாம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். விடாமுயற்சி அறிவிப்பு கால தாமதம் ஆனதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது.

ஆகையால் விடாமுயற்சியுடன் அஜித் தனது பட வேளையில் கவனம் செலுத்த இருக்கிறார். மேலும் மிக விரைவில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கெட்டப் புகைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்கச் செய்ய வேண்டும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

Also Read : அஜித்தின் திறமையை வெளிப்படுத்துவதற்காக எடுத்த 4 படங்கள்.. நிஜம், நிழல் எல்லாமே ஒன்னுதான் சாமி

Trending News