வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தலைவர் சொன்னதால் அஜித் நடிக்க இருக்கும் பாட்ஷா-2.. உறுதிப்படுத்திய ஹெச். வினோத்

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க ஆயத்தமாகியிருந்தார். ஆனால் அண்மையில் இணையத்தில் பலரும் அதிர்ந்து வரும் செய்தியாக ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்திற்கு ஏகே62 படத்தின் கதைக்களம் பிடிக்காத நிலையில் இந்த முடிவை அஜித் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இவர்களது கூட்டணி ஏகே 62 படத்திற்கு பின் வரக்கூடிய அடுத்தடுத்த அஜித் படங்களில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்க உள்ளார் என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், இன்னும் உறுதிப்படுத்தும் விதமான செய்திகள் வெளியாகவில்லை. இதனிடையே அஜித்தின் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அஜித் சார் கிட்ட இருந்து எல்லாரும் இந்த 3 விஷயத்தை கத்துக்கணும்.. பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட ஹெச்.வினோத்

இதனிடையே அஜித்தின் ஏகே 62 திரைப்படம் குறித்த கதைக்களத்தை வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு உள்ளிட்ட அஜித்தின் படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். நடிகர் அஜித் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியான பில்லா படம் மாஸ் ஹிட்டான நிலையில், 1980 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது.

அந்த வகையில் ரஜினியின் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாட்ஷா படத்தை ரீமேக் செய்து அஜித்தின் நடிப்பில் பாட்ஷா 2 என்ற டைட்டிலில் உருவாக்கபடவுள்ளதாக ஹெச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தை சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து விஷ்ணுவர்தன், அஜித் கூட்டணியில் இப்படம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

Also Read: ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்

இந்நிலையில் லைகா நிறுவனம் ஏகே 62 படத்தை தயாரிக்கவுள்ள நிலையில், ரஜினியிடம் பேசி பாட்ஷா 2 படத்தில் அஜித் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளதாம். இந்நிலையில் விஷ்ணுவர்தன், அஜித் காம்போவில் உருவாக உள்ள இப்படத்தின் அப்டேட் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அஜித் பில்லா படத்தில் எப்படி நடித்தாரோ அதைப் போலவே பாட்ஷா 2 படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை இயக்குனர் ஹெச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய நிலையிலும், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வராமல் உள்ளது. நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் தெறிக்கவிட்டு வரும் நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தை யாரு இயக்குவார்கள் என்றே தெரியாமல் உள்ளதால், அஜித் ரசிகர்கள் சற்று சோர்வில் உள்ளனர்.

Also Read: அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

Trending News