வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முடிவுக்கு வந்த அண்ணன், தம்பி உறவு.. காசு விஷயத்தில் கரார் காட்டியதால் அஜித் செய்யப்போகும் காரியம்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் முதல் டப்பிங் அஜித் பேசி முடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதி டப்பிங் பேசுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.

இதனால் படத்தின் வேலைகளை விரைந்து முடிக்க படக்குழு செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தயாரித்திருந்தார். இப்போது துணிவு படத்தையும் சேர்ந்து தொடர்ந்து மூன்று படங்களுக்கான வாய்ப்பை போனி கபூருக்கு அஜித் கொடுத்திருந்தார்.

Also Read : விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அறிவுரை சொன்ன அஜித்.. இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதா!

ஆனால் இப்போது காசு விஷயத்தில் போனி கபூர் இழுத்தடித்து வருகிறாராம். அதாவது அஜித்துக்கு பேசியபடி சம்பளம் வரவில்லையாம். அஜித்தும் அண்ணன், தம்பி போல் பழகியதால் சிறிது காலம் விட்டு பிடித்துள்ளார். அப்போதும் போனி கபூர் பணத்தை கொடுத்த பாடு இல்லையாம்.

அதனால் தான் அஜித் மன வருத்தத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற சென்று விட்டாராம். இப்போது வரை துணிவு படத்தின் இரண்டாவது பாதி டப்பிங் முடித்துக் கொடுக்க வில்லையாம். ரிலீஸ் தேதி நெருங்குவதால் போனி கபூர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறாராம்.

Also Read : ஒட்டுமொத்த வசூலையும் வாரி துண்ணலாம் என நினைத்த விஜய்.. ஆசையில் மண் அள்ளிப் போட்ட அஜித்.!

மேலும் துணிவு படத்துடன் இவரின் சவகாசமே வேண்டாம் என்று போனி கபூருக்கு இனி அஜித் வாய்ப்பு கொடுக்க மாட்டார் என பலரும் பேசி வருகிறார்கள். வலிமை, துணிவு படப்பிடிப்பில் அஜித்துடன் எடுக்கும் புகைப்படங்களை போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்வார்.

ஒரு அண்ணன், தம்பி போல் இருந்த இவர்களது பாசம் இப்போது பணத்தால் முறிந்துள்ளது. மேலும் அஜித் தனது ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக விரைவில் துணிவு படத்தின் டப்பிங் முடித்துக் கொடுப்பார் என்றும் சொன்ன வாக்கில் இருந்து அஜித் எப்போதும் பின்வாங்க மாட்டார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also Read : இதுக்குத்தான் ஒன்றரை வருஷம் இடைவெளியா? சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த மன்னர் கதையில் அஜித்

Trending News