திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் தான் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பை உண்டாக்கி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் பட குழுவும் வாரத்திற்கு ஒரு அப்டேட்டை வெளியிட்டு அனைவரையும் திணறடித்து வருகின்றனர்.

தற்போது அதை ஓரம் கட்டும் அளவிற்கு ஏகே 62 அதிரி புதிரியாக தயாராகி இருக்கிறது. துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் உடனே தன் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இப்படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

Also read: நண்பர் தயாரிப்பில் அஜித் வெற்றி கண்ட 9 படங்கள்.. மூன்று கெட்டப்பில் படைத்த வரலாறு

அந்த வகையில் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியதை அடுத்து மகிழ் திருமேனி, அஜித்தை இயக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளி வந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் படத்தின் டைட்டில் பற்றிய ஆர்வமும் அஜித் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இப்படி மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஏகே 62 படத்தின் டைட்டிலை ஆரவாரமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதிலும் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ம் தேதி இந்த சர்ப்ரைஸை கொடுக்க அவர்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.

Also read: விஜய்யை வைத்து கேவலமான விளம்பரம் தேடும் விஷால்.. பப்ளிசிட்டியா இல்ல பதவியா, உஷாரா இருங்க

தற்போது வெளிநாட்டில் இருக்கும் அஜித் தன் பிறந்தநாள் அன்று கூட இந்தியா திரும்ப மாட்டாராம். அதாவது பத்தாம் தேதி தான் அவர் சென்னை திரும்ப இருக்கிறார். அவர் ஊர் திரும்பினாலும் படத்தை தொடங்க முடியாது. ஏனென்றால் இன்னும் படத்திற்கான ஹீரோயின் வேட்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அதைத் தொடர்ந்து மற்ற நடிகர்களின் தேர்வும் நடைபெற இருக்கிறது. இவை எல்லாம் முடிந்த பிறகு தான் படத்தை தொடங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அப்படி பார்த்தால் ஏகே 62 ஜூன் மாத தொடக்கத்தில் தான் ஆரம்பிக்கப்படும். இதனால் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி போயிருக்கின்றனர். இருந்தாலும் டைட்டில் அறிவிப்பாவது வருகிறதே என்று மனதை தேற்றி வருகின்றனர்.

Also read: பாக்ஸ் ஆபிஸை முதல் நாளிலேயே மிரட்டிய 3 படங்கள்.. டாப் லிஸ்டில் இருக்கும் துணிவு

Trending News