திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷின் எல்சியுவில் இணையும் அஜித்.. நா பண்ற பத்து படங்களில் நீங்க இல்லன்னா எப்படி AK

Lokesh,Ajith: லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு தான் ரசிகர்கள் இப்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தை கொடுத்து விட்டு அடுத்த படத்தில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார். அதிலும் நாம் எதிர்பார்க்காத ஒன்றை தான் கொடுத்து திக்கு முக்காடா செய்து வருகிறார்.

தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் மாஸ்டர் மற்றும் லியோ படத்தை எடுத்திருக்கிறார். அடுத்ததாக விக்ரம் 2, கைதி 2, ரஜினி படம் என லயன் அப்பில் எக்கச்சக்க படங்கள் இருக்கிறது. இந்த சூழலில் இன்னும் லோகேஷ் 10 படங்கள் மட்டும் தான் பண்ணுவேன் என்று சமீபத்தில் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

Also Read : சிங்கமும், சிறுத்தையும் ஒரே படத்திலா?. 10 படத்துக்குள்ள மொத்த ஹீரோவும் லாக் செய்யும் லோகேஷ்

இந்த பத்து படங்களில் அஜித் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித்தின் படத்தை நீங்கள் இயக்குவீர்களா என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் லோகேஷ் ஒரு பதில் அளித்துள்ளார்.

அதாவது கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் அஜித் படத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார். தற்போது வரை லோகேஷின் ஹீரோக்கள் வரிசையில் கார்த்தி, கமல், விஜய் சூர்யா போன்ற பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள். அடுத்ததாக ரஜினியும் விரைவில் இந்த லிஸ்டில் இடம்பெற இருக்கிறார்.

Also Read : அடுத்த ஹீரோவை உறுதி செய்த லோகேஷ்.. பிரம்மாண்ட தயாரிப்பாளர் கூட்டணியில் வெளிவர உள்ள அப்டேட்

இப்போது அஜித்தும் லோகேஷ் படத்தில் இணைவார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. மேலும் இவருடைய படங்களில் தொடர்ச்சியாக நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆகையால் விஜய், அஜித் இருவரும் ஒன்றாக நடித்து கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகிவிட்டது. இவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி செய்தனர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் இதற்கான முயற்சியில் இறங்கி இருந்தார். ஆனால் அது கை கூடாத நிலையில் லோகேஷ் அஜித்தை வைத்து இயக்கினால் கண்டிப்பாக அதில் விஜய் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருவரும் மீண்டும் ஒன்றாக நடித்தால் வேற லெவலில் இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : கமலை பார்த்து சினிமாவில் சாதித்த 6 இயக்குனர்கள்.. பாலிவுட்டை மிரள விடும் லியோ லோகேஷ்

Trending News