வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார்.
மேலும் அஜித்தின் 61-வது படமான துணிவு திரைப்படத்தையும் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான உரிமையை லைக்கா பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி துணிவு படத்திற்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு படமும் வெளியாக்குவதால், இந்த இரண்டு படத்திற்கான பட ப்ரொமோஷன்கள் இனி வரும் நாட்களில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளனர்.
Also Read: நெருங்கிய நண்பருக்கு மொத்தத்தையும் வாரிக் கொடுத்த அஜித்.. ரகசியமாய் வெளிநாடுகளில் செய்யும் வேலை
இந்நிலையில் இணையத்தில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாவது மிகவும் அபூர்வம். ஆனால் வலிமை படத்தின் ரிலீஸ் தொடர்ந்து அஜித்தின் நிறைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதுவும் இப்போது அஜித் தனது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் அதிக வெளியாகி வருகிறது.
இவ்வளவு நாட்களாக துணிவு படத்திற்காக நீண்ட தாடி மீசையுடன் இருந்த அஜித் தற்போது தன்னுடைய லுக்கை மாற்றி மீண்டும் கிளீன் சேவ் செய்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அடுத்த படத்திற்கு ரெடி என்று சிம்மாலிக்காக சொல்லி இருக்கிறார்.
Also Read: அஜித்துக்கு ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.. வெளிவந்தது விட்டுக்கொடுக்காததன் ரகசியம்
இனிமேல் துணிவு கெட்டப் ஸ்கிரீனில் மட்டும் தான் என்று இந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. மேலும் அஜித் எப்போதுமே தனது படத்திற்கு ப்ரமோஷன் செய்ய மாட்டார். ஆனால் துணிவு படத்திற்கு ப்ரமோஷன் நடக்க உள்ளதாகவும் அதில் அஜித் பங்கு பெறுவார் என ஒரு வதந்தி கிளம்பியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அஜித் ஒரு நல்ல படமே அதற்கான பிரமோஷன் என்று கூறிவிட்டார். தற்போது அஜித் வெளியிட்டு இருக்கும் கிளீன் சேவ் நியூ லுக் புகைப்படம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் அடுத்த நடிக்கும் படத்தின் கெட்டப்பும் இதுதான் என்றும் சோசியல் மீடியாவில் இந்த புகைப்படம் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அஜித்தின் நியூ லுக் புகைப்படம்

Also Read: இணையத்தில் ட்ரெண்டான அஜித் ஷாலினி ரொமான்டிக் புகைப்படம்.. துணிவு பிரமோஷன் யுக்தியா?