வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாரிசை விட எதிர்பார்ப்பை அதிகரித்த துணிவு சஸ்பென்ஸ்.. ட்ரெய்லரால் ரிலாக்ஸான அஜித்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆகையால் டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. மங்காத்தா ஸ்டைலில் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த படமாக துணிவு படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகும் என கூறப்பட்டது. துணிவு படத்தின் ட்ரெய்லரை பார்த்து பயந்த வாரிசு படக்குழு 4ஆம் தேதி ட்ரெய்லர் விடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இன்று வாரிசு ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

Also Read : அன்போ, அடியோ பார்த்து கொடுக்கணும், திரும்ப ட்ரிபிள் மடங்கு கொடுப்பேன்.. அன்பு பயத்தை காட்டிய வாரிசு டிரைலர்

பொதுவாக விஜயின் ட்ரெய்லர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு கணிப்பு உண்டு. அதை அப்படியே நேர் எதிராக மாற்றி உள்ளார் வம்சி.ஸட்ரெய்லரை வைத்தே கதையை எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. தந்தையின் எதிர்ப்புக்கும், தாயின் பாசத்திற்கும் ஆளான கடைக்குட்டி பிள்ளையாக விஜய்.

கூட்டுக் குடும்பமாக இருந்த விஜய்யின் குடும்பம் சொத்து பிரச்சனைகளால் உடைகிறது. அதை சேர்க்க எப்படி விஜய் முற்படுகிறார் என்பதை எல்லா படங்களில் போல அரைச்ச மாவையே அரைச்சி உள்ளார்கள். அதுமட்டுமின்றி வாரிசு படம் முழுக்க முழுக்க தெலுங்கு வாசம் அதிகம் உள்ளது.

Also Read : வாரிசு பட நடிகருடன் திருமணமாகி செட்டில் ஆன சிவரஞ்சனி.. 90களில் இளசுகள் ஏங்கிய கண்ணழகி

கில்லி படத்தில் விஜய்க்கு டஃப் கொடுத்த பிரகாஷ்ராஜ் வாரிசு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எதிர்பார்த்த அளவு கவனம் பெறவில்லை. மேலும் ட்ரெய்லரில் ஸ்ரீகாந்த் முகத்தைப் பார்த்த உடனே தெலுங்கு படம் என்று தான் நினைவுக்கு வருகிறது. மேலும் படத்தின் டப்பிங் ஜுராசிக் பார்க் படத்தில் வருவது போல உள்ளது. வாரிசு படத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் சில பிளஸ் பாயிண்ட் உள்ளது.

அதாவது குடும்பத்துடன் பார்க்கும் ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு பேக்ரவுண்ட் மியூசிக் மற்றும் பாடல்கள் பலம் சேர்த்துள்ளது. ஆனால் அஜித்தின் துணிவு படம் அளவிற்கு வாரிசு படத்தில் சஸ்பென்ஸ் இல்லை. விஜய்க்கு பதிலாக மகேஷ்பாபு நடித்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் வாரிசு விஜய்க்கான படம் இல்லை என்பதில் ட்ரெய்லர் மூலம் தெரிய வருகிறது. மேலும் துணிவு படத்திற்கு போட்டியாக வாரிசு படத்தை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாரிசு படத்தின் ட்ரெய்லரை பார்த்த அஜித் இப்போது பெருமூச்சு விட்டுள்ளார். இந்தப் படத்திற்காக தில் ராஜு ஓவர் பில்டப் கொடுத்தார் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். ஆனால் இப்போதே துணிவு படத்தின் வெற்றி உறுதி என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

Trending News