புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அஜித்தை டென்ஷனாகிய மங்காத்தா தயாரிப்பாளர்.. இதற்கெல்லாம் காரணம் சூர்யா தானா

அஜித்துக்கு ஒரு மாஸ் ரசிகர்கள் கூட்டம் வர காரணமாக இருந்த படம் மங்காத்தா தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை மேலும் வலு சேர்த்தது. அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படமாக மங்காத்தா படம் உள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மங்காத்தா படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். அப்போது இந்த படத்தின் வெளியிட்ட உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் தயாநிதி கொடுத்தார்.

Also Read : ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

இப்போது உள்ளது போல உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு அந்த சமயத்தில் பெயர் கிடையாது. ஆகையால் உதயநிதி கொஞ்சம் லாபம் வைத்து ஞானவேல் ராஜாவிடம் கொடுத்துள்ளார். ஞானவேல் ராஜா சூர்யாவின் நெருங்கிய உறவினர் ஆவார். சமீபத்தில் கூட சூர்யாவின் நிறைய படங்களை இவர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ஞானவேல் ராஜா பெயருடன் மங்காத்தா படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த விஷயம் எல்லாம் அஜித் காதுக்கு செல்லாமல் தயாநிதி செய்துள்ளார். ஆகையால் இந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித் உடனடியாக தயாநிதியை அழைத்துப் பேசி உள்ளார்.

Also Read : IMDB இந்தியளவில் பாப்புலரான 6 பிரபலங்கள்.. அஜித், விஜய்யை காணாமல் ஆக்கிய நடிகர்

அப்போது யாரைக் கேட்டு மங்காத்தா படத்தை ஞானவேல் ராஜாவிற்கு கொடுத்தீர்கள். அவர் சூர்யா உடைய ஆள், அவரிடம் எப்படி நம்ப படத்தை கொடுக்கலாம் என்று கோபமாக அஜித் பேசி உள்ளார். அதன் பின்பு மங்காத்தா படத்திற்காக ஞானவேல் ராஜாவுடன் ஒப்பந்தம் போட்டதை ரத்து செய்து கையெழுத்து வாங்கி விட்டனர்.

தயாநிதி மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து தான் இப்படத்தை விநியோகம் செய்தது. மேலும் மங்காத்தா படத்தின் மூலம் நல்ல லாபமும் கிடைத்தது. அந்த சமயத்தில் அஜித் கோபமும் சரியானது என்று தான் பலரும் கூறினார்கள். ஹீரோவுக்கு தெரியாமல் தயாரிப்பாளர் ஒரு முடிவை எடுத்தது தவறு தான் என்று அஜித் பக்கம் நின்றனர்.

Also Read : ஏ ஆர் முருகதாஸை வெறுத்து ஒதுக்கிய அஜித், சிக்கிய விஜய்.. இன்று வரை இணையாததற்கு இதுதான் காரணம்

Trending News