சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய்யின் அரசியலை குறிவைத்து தட்டித் தூக்க நினைக்கும் அஜித்.. அடுக்கடுக்காக போட்டு இருக்கும் மாஸ்டர் பிளான்

Actor Vijay and Ajith: இந்த வருட ஆரம்பத்திலேயே விஜய் மற்றும் அஜித் போட்டி போடும் விதமாக இவர்களுடைய படங்கள் திரையரங்குகளில் வெளிவந்தது. அதில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அஜித் படத்தின் துணிவிற்கு எதிர்பார்ப்பையும் தாண்டி நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனாலயே இந்த வருடம் அஜித்திற்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்தது.

இருந்தாலும் இவருடைய அடுத்த படமான விடாமுயற்சி படத்திற்கான எந்த வித தகவலும் தற்போது வரை இல்லாமல் இருந்தார். இதனால் இவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் அஜித் ஏன் இவ்வளவு அமைதி காத்து வருகிறார், அவர் எதையுமே கண்டு கொள்ளாமல் அவருடைய வேலை மட்டுமே பார்க்கிறார் என்று பலரும் இவரை கேலி செய்தார்கள்.

Also read: விஜய்க்காக காத்திருக்கும் ரகடான இயக்குனர்.. லோகேஷை ஓவர்டேக் செய்ய தயாராகும் ஸ்கிரிப்ட்

இப்படி பல குழப்பங்களை எழுப்பிய நிலையில் ஒரு தீர்மானமான முடிவு கூட எடுக்க முடியாமல் அமைதியாகவே இருந்தார். ஆனால் அமைதிக்கு பின் எப்பொழுதுமே சொல்வார்களே ஒரு பூகம்பம் வெடிக்கும் என்று அது தற்போது ஆரம்பிக்கப் போகிறது. அதாவது அஜித் போட்டிருக்கும் கணக்கே வேறு மாதிரி. அந்த வகையில் தற்போது விடாமுயற்சி படம், அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என்று கணக்கு போட்டு வைத்திருக்கிறார்.

அதன்பிறகு சினிமாவில் வெற்றி பெறுவதற்கு விஜய் என்ன செய்வாரோ அதையே ஃபாலோ பண்ண இருக்கிறார். அதாவது பெரிய இயக்குனர், பிரம்மாண்டமான தயாரிப்பாளர், ட்ரெண்டிங் ஆன இசையமைப்பாளர் என அனைத்தையும் பார்த்து பார்த்து களம் இறங்கி அதிக வசூல் வேட்டையாட கூடியவர் விஜய்.

Also read: அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தை படத்தில் காட்டிய விஜய்.. தளபதி நடிப்பை மோசமாக விளாசிய இயக்குனர்

இந்த விஷயத்தை எல்லாம் தற்போது அஜித் செய்ய இருக்கிறார். அதாவது விஜய் தற்போது அரசியல் சம்பந்தமான வேலைகளை பார்ப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார். அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி அஜித் அனைத்தையும் தட்டித் தூக்க இருக்கிறார். குறைந்தது விஜய் இரண்டு வருடம் அரசியலில் மும்முரமாக செயல்பட வேண்டும்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அஜித் பெரிய இயக்குனர்கள் கூட கூட்டணி வைத்து நடிக்கப் போகிறார். இதுவரை அஜித் ஆமை மாதிரி தான் செயல்பட்டு வருகிறார் என்று பலரும் கேலி செய்தவர்களுக்கு கூடிய விரைவில் சரியான பதிலடி கொடுக்கப் போகிறார். இப்படி அடுக்கடுக்காக பிளான்களை மனதிற்குள் போட்டு வைத்து செயல்பட்டு வருகிறார்.

Also read: யாருக்கும் அடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்ட கார்த்தி.. முதல் முதலாக அஜித் படத்தில் கம்பேக்

Trending News