சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பழைய பகையை தீர்க்க காத்திருக்கும் அஜித்.. வச்ச குறி தப்புமா?

2025 பொங்கலுக்கு விடாமுயற்சியுடன் அருண் விஜய்-பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் நேருக்கு நேராக மோதுகிறது.

மூன்றாவதாக சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படமும் பயங்கர எதிர்பார்ப்பில் வெளிவர உள்ளது.

இன்று அஜித் தனது விடாமுயற்சிக்கான டப்பிங் வேலையை தொடங்கியுள்ளார், விரைவில் படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தடபுடலாக நடக்குமாம்.

ஒரு கட்டத்தில் அருண் விஜய் தூக்கி விட்ட அஜித் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட மற்றுமொரு முக்கிய காரணம் உள்ளது அதுதான் பாலாவை பழி தீர்க்க வேண்டும் என்பது.

பல வருடங்களாக பாலாவிற்கும்-அஜித்திற்கும் உள்ள அடிதடி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரே தேதியில் வணங்கான் உடன் விடாமுயற்சி மோத உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பாலாவும் விவாகரத்திற்கு பின் ஒரே ஒரு படத்தின் ஹிட்டுக்காக தவமாய் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றார், ஏற்கனவே இதே படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News