திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யா பட இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.. விடாமுயற்சிக்குப் பிறகு புது அவதாரம் எடுக்கும் ஏ கே

Actor ajith: அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற கவலை தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. எப்போதோ தொடங்கப்பட்டிருக்க வேண்டிய படம் இப்போது பல குளறுபடிகளின் காரணமாக தாமதமாகி கொண்டே போகிறது.

இருப்பினும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று பட குழு இப்போது தீவிரம் காட்டி வருகிறது. அதை தொடர்ந்து இடைவேளை இல்லாமல் இரண்டு மாத காலத்தில் ஷூட்டிங்கை முடிக்கவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு இருக்கிறதாம்.

Also read: பில்லாவில் நடிக்க மறுத்த ஹீரோ.. அஜித் மீது இருந்த வெறுப்பால் எடுத்த முடிவு

இந்த சூழலில் அஜித் விடாமுயற்சிக்குப் பிறகு புது மனுஷனாக வேற ஒரு அவதாரம் எடுக்கப் போகிறாராம். அதாவது விஜய் பாணியில் சின்ன இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இனிமேல் பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரபல இயக்குனர்கள் என அவர் அடுத்தடுத்த பிரம்மாண்ட கூட்டணியில் இணைய முடிவு செய்து இருக்கிறாராம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் அடுத்ததாக நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா அஜித்தை வைத்து வீரம் உட்பட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

Also read: வில்லன் இல்லாமல் விஜய் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலையையும் சாதகமாகிய தளபதி

அதைத்தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து முடிவு செய்து இருக்கும் அஜித் தக்க சமயத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

மேலும் விடாமுயற்சி தாமதமானதால் அஜித்திற்கு நடிக்க விருப்பமில்லை என்றும் சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்றும் ஒரு பேச்சு கிளம்பியது. ஆனால் இதன் மூலம் அத்தனை பேச்சுகளும் அடிபட்டு போயிருக்கிறது. அந்த வகையில் ஏகே-வின் புது அவதாரத்தை காண ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: கடைசியில் அஜித்துக்கு வந்த சீரியஸ்னஸ்.. சிறுத்தை சிவா கூட்டணிக்கு பின் 3 பெரிய திமிங்கலத்துக்கு பொறி வைக்கும் AK

Trending News