புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தையும் சிக்க வைத்த பிரபல நிறுவனம்.. விடாமுயற்சிக்கு பின் உருவாகும் மாஸ் கூட்டணி

Actor Ajith: அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே அஜித்தின் அடுத்த படத்திற்கான கூட்டணி வெளியாகி இருக்கிறது.

அதாவது பெரும்பாலான ஹீரோக்கள் புதிய இயக்குனருடன் கூட்டணி போட ஆசைப்படுவார்கள். ஆனால் அஜித்தை பொருத்தவரையில் தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்களுடன் தான் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் அஜித்துக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.

Also Read : மகிழ் திருமேனியை அஜித் லாக் செய்ய முக்கிய காரணமாக இருந்த 5 படங்கள்.. நடிகராக எடுபடாமல் போன ரெண்டு படம்

இவருடன் தான் அஜித் அடுத்த படத்தில் கூட்டணி போடுவது உறுதியாகிவிட்டது. ஆனால் இதுவரை பிரபல நிறுவனத்திற்கு படம் பண்ணாத அஜித் முதல் முறையாக இணைய இருக்கிறார். அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் அஜித் 63 வது படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. ஆனால் அஜித்தின் மங்காத்தா படத்தை விநியோகம் மட்டுமே செய்திருந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் சமீபகாலமாக நல்ல வசூல் தரும் படங்களை கொடுத்து வரும் நிலையில் அஜித்தையும் தனது வலையில் சிக்க வைத்திருக்கிறது.

Also Read : உன் சவகாசமே வேண்டாம், ஒதுங்கிய அஜித்.. பெரிய இடத்தை பகைச்சாலும் ஏகே தனிக்காட்டு ராஜா தான்

இப்போது அஜித்தின் பைக் சுற்றுப்பயணம் பற்றி பேசினால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அஜித் படம் பண்ண மாட்டார். இதனால் இப்போது சாதூர்யமாக பேசி அஜித்தை தனது படத்தில் புக் செய்து விட வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் செயல்பட்டு வருகிறது. மேலும் அஜித்திடம் கால்ஷீட் மட்டும் வாங்க வேண்டும் என்பதுதான் இப்போது அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது.

ஏனென்றால் படத்தில் கமிட் செய்து விட்டால் எப்படியும் அவர்களை வலிக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அந்த வகையில் தான் பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நடக்காத நிலையில் விஜய்யை தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்க வைத்திருந்தனர். அதேபோல் ஜெயிலர் வெற்றியை வைத்து ரஜினியை அடுத்த படத்திலும் லாக் செய்து விட்டார்கள். இப்போது அதே போல் தான் அஜித்தையும் குறிவைத்து சிக்க வைக்க உள்ளனர்.

Also Read : 3 நாள் சூட்டிங் போன பிறகும் முடியாதுன்னு ஒதுங்கிய அஜித்.. பணம் தான் முக்கியம்னு ஏ கேவை ஒதுக்கிய இயக்குனர்

Trending News