திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தயாரிப்பாளர்கள் வலி தெரிந்து நடந்து கொள்ளும் அஜித்.. எல்லா படத்துக்கும் இதே நிலைமைதான்னா எப்படி பாஸ்

Actor Ajith: நடிகர்களிலேயே அஜித் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்பவர். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார், தனக்கென ரசிகர் மன்றத்தையும் விரும்பாதவர். இவர் தயாரிப்பாளர்களின் வழி தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்கிறார்.

இது அவரை உயர்ந்த மனிதனாக பார்க்க வைக்கிறது. அஜித் தற்போது துணிவு படத்திற்கு பிறகு லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு அபுதாபியில் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது.

Also Read: அஜித் எங்களுக்கு மருமகனே இல்ல.. 23 வருடங்கள் கழித்து வாய் திறந்த ஷாலினியின் அப்பா!

விடாமுயற்சி படத்திற்கு அஜித்தின் சம்பளம் 105 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. இதில் அட்வான்ஸாக 25 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகையை படம் வெளியாகும் வரை மாதம் 5 கோடி வீதம் வாங்கி கொள்வாராம் அஜித். இது இந்த படத்திற்கு மட்டுமல்ல அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் இதே தான் செய்து வருகிறாராம்.

இதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் முழு பணத்தை கொடுத்து கஷ்டப்படாமல் சிறிது சிறிதாக கொடுக்கும் போது அவங்களுக்கு பெரிதாக தெரியாது படம் முடியும் வரை வாங்கிக் கொள்வாராம். இது எந்த நடிகர்களும் பண்ணாத காரியம். இதிலும் வித்தியாசமாக அஜித் செய்வது மற்ற ஹீரோகளுக்கு ஆச்சரியமாக இருந்து வருகிறது.

Also Read: அஜித்தால் சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஓடிய நடிகை.. சிம்ரன் அளவுக்கு வர வேண்டியவங்க!

எல்லா படத்துக்கும் இதே நிலைமைதான்னா எப்படி பாஸ்! சின்ன தயாரிப்பாளர்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் லைக்கா நிறுவனத்திற்கெல்லாம் என்ன குறைச்சல். அஜித்தின் சம்பளத்தை பிச்சு பிச்சு கொடுக்க வேண்டிய அளவிற்கு அவர்கள் இல்லை. அப்படி இருந்தும் அஜித்துக்கு தவணை முறையில் தான் சம்பளத்தை கொடுக்கின்றனர்.

தற்போது தல ரசிகர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தை தான் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். ஆக்சன் படங்களை வித்தியாசமான திரை கதையில் இயக்கும் மகிழ்திருமேனி, நிச்சயம் விடாமுயற்சி படத்தில் அஜித்தை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அஜித்துடன் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு முதலில் அபுதாபியில் முடித்துவிட்டு அதன் பின் பல இடங்களில் நடைபெற உள்ளது. சில மாதங்களிலேயே இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: கதை கிடைக்காமல், ஹாலிவுட் பக்கம் சென்ற அஜித்.. விடாமுயற்சி எந்த படத்தின் தழுவல் தெரியுமா?

Trending News