வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் இணையும் பிரபல இயக்குனர்.. AK-63 அப்டேட்

ஏகே 63 திரைப்படத்திற்காக பிரபல இயக்குனரை அஜித் தேர்ந்தெடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  அஜித், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து ஏகே 61 படத்தை நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடியும் எனவும் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அஜித் வாய்ப்புக்கொடுத்ததன் மூலமாக இயக்குனராக அறிமுகமான எ.ஆர்.முருகதாஸ்,பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

முக்கியமாக ரமணா, கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களும் விஜய்யின் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அப்படம் சரியாக ஓடாததால் தெலுங்கில் சில படங்களை இயக்கினார்.

அங்கும் பெருசாக இவருக்கு மார்க்கெட் இல்லாததால் தற்போது என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி வருகிறார். மேலும் அவ்வப்போது அவரது உடல்நிலையும் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வெளியானது. இதனையறிந்த அஜித் ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து நேரில் பேசியுள்ளார்.

மேலும் அவருக்கு தைரியம் சொன்ன அஜித் கூடிய விரைவில் நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என ஏ.ஆர்.முருகதாஸிடம் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப்போகும் நிலையில், தனது அடுத்து படமான ஏகே 63 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சேரலாம் என அஜித் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் நடிப்பில் தொடர் மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜயின் ஆஸ்தான இயக்குனராக வலம் வந்தார். இதனிடையே 22 வருடங்கள் கழித்து,ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் அஜித்தின் நடிப்பில் படம் இயக்கவுள்ளது, மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Trending News