வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எனக்கு இருக்கும் ஒரே டாஸ்க் இதுதான்.. அஜித் ஏகே 62 படத்தைப் பற்றி பேசிய விக்னேஷ் சிவன்

அஜித் நடிப்பில் உருவாகயுள்ள ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். சமீபத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் இத்திரைப்படத்தை பற்றிய சில தகவல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அஜித் மீண்டும் வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கை கோர்த்துள்ளார். ஏகே 61 திரைப்படத்தை முடித்ததற்கு பின் அஜித் விக்னேஷ் சிவனுடன் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிப்பார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகி உள்ளது. இதனிடையே சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நயன்தாரா,சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்களிடையே கமர்சியல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்ற நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்த அஜித்தின் ஏகே 62 படத்தை எப்படி இயக்கப்போவதாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஏகே 63 திரைப்படத்திற்கு என்னுடைய முழு மனதையும் நூறு சதவிகிதம் என்னுடைய முழு முயற்சியையும் கொடுப்பேன் எனவும் அஜித்தின் அனைத்து ரசிகர்களுக்கும் ஏகே 62 திரைப்படம் ஒரு தரமான படமாகவும் , அனைவருக்கும் திருப்தியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் அதாரு அதாரு பாடலை எழுதி  அஜித்திடம் நல்ல பெயரை வாங்கினார். இதைத்தொடர்ந்து வலிமை படத்திலும் இரண்டு பாடல்களை எழுதி அசத்தினார். இதனிடையே தற்போது அஜித்தின் நடிப்பில் ஏகே62 படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனிடையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், தற்போது அனைத்து இயக்குனர்களும் தமிழ் சினிமாவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முயற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News