தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் போல தான் ஆந்திராவில் ராஜமௌலி. பல பிரம்மாண்ட படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
ஆர் ஆர் ஆர் படம் அக்டோபர் மாதம் வெளியாக இருந்தது. சில காரணங்களால் அது தள்ளிப் போகச் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதித்த நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் வெளியீடு தேதியை தள்ளி வைத்தனர்.
ஒவ்வொரு முறையும் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் ஆர் ஆர் ஆர் படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதேபோல் அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது .
இந்நிலையில் வலிமை படம் மார்ச் 17, 18 தேதிகளில் உறுதியாக வெளியாக உள்ளது. எந்த தடை வந்தாலும் மார்ச் மாதத்தில் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளது. வலிமை ரிலீஸ் தேதியிலேயே ஆர்ஆர ஆர் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.
ஆனால் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை ஏப்ரல் மாதம் தான் வெளியிட வேண்டும் என உறுதியாகக் கூறியுள்ளாராம். ஏனென்றால் அவர் இயக்கிய பாகுபலி படம் ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலில் வேட்டையாடியது. இதனால் சென்டிமென்டாக ஆர்ஆர்ஆர் படத்தையும் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு முடிவு செய்துள்ளார்களாம்.