இயக்குனர்கள் பல படங்களை பார்க்கும்போது அதில் நடித்திருக்கும் சில கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்துப் போகும். அதனால் நாம் படங்களில் இந்த கதாபாத்திரத்தில் அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர்கள் விரும்புவார்கள்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலச்சந்தர் ஆல் உருவாக்கப்பட்ட பிரபலங்கள் பலர் உண்டு. அந்த வகையில் பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜி எம் சுந்தர். இப்படத்தில் இருந்து இவர் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்தில் ஜிஎம் சுந்தருக்கு நல்லதொரு வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு குமார் நடித்த மண்டேலா, சார்பட்டா பரம்பரை, ரைட்டர் ஆகிய படங்களில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
மகாமுனி படத்தில் ஜிஎம் சுந்தர் நடித்த எதிர்மறையான போலீஸ் கதாபாத்திரம் வலிமை பட இயக்குனர் வினோத்துக்கு பிடித்துப் போனதால் வலிமை படத்தில் குமாருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். குமார் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அஜித்துடன் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
அந்த நேர்காணலில், அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். வலிமை படத்தின் படப்பிடிப்புக்காக நான் செல்லும்போது அஜித் சாரிடம் உங்களிடம் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என கூறினேன். அதற்கு பதில் அளித்த அஜித் உங்களுடன் நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி என கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, நான் அப்படி ஒன்றும் பெரிய நடிகன் இல்லையே சார் என்று சொன்னேன். உங்களுக்கு எப்படி ஒரு இயக்குனர் வாய்ப்பு கொடுத்தாரோ அதே போல தான் நானும் இங்கு வந்துள்ளேன் என பணிவுடன் கூறியது அவருடைய எளிமை காட்டுகிறது என்று குமார் கூறியிருந்தார்.