திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வலிமை படத்துல இதெல்லாம் இருக்கக் கூடாது.. அஜித் போட்ட அதிரடி கண்டிஷன்

தல அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வந்த வலிமை படம் ஒரு வழியாக வருகின்ற பொங்கலுக்கு உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. முன்னதாக வலிமை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் மற்றும் வினோத் ஆகிய இருவரும் நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். மேலும் போனி கபூர் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்குதான் தற்போது தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

இது ஒருபுறமிருக்க தல அஜித் வலிமை படத்தின் ஆரம்பத்திலேயே வினோத்துக்கு சில கண்டிஷன்கள் வைத்ததாக ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து போலீஸ் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு படம் விட்டு ஒரு படம் போலீஸ் கதையில்தான் நடிக்கிறார். அந்த வகையில் வலிமை படமும் ஒரு மிரட்டலான போலீஸ் கதையில் உருவாகி உள்ளது. ஆனால் இந்த கதையின் ஆரம்பத்திலேயே அஜித் வினோத்திடம் சில முக்கியமான விஷயங்களை இந்த படத்தில் சேர்க்கக்கூடாது என கூறியுள்ளார்.

அது என்னவென்றால், மொத்த போலீஸ் செய்யும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் வைப்பதோ, அல்லது தனி நபர் தாக்குதல் இல்லை அரசியல் சர்ச்சைக்குரிய வசனங்களை இந்த படத்தில் சுத்தமாக இருக்க கூடாது என கூறிவிட்டாராம் அஜித். யாரையும் தேவையில்லாமல் சீண்டி பகைத்துக் கொள்ளக்கூடாது என்பது தல அஜித் கடைபிடிக்கும் பழக்கங்களில் ஒன்று.

அது தேவையில்லாமல் தன்னுடைய சினிமா கேரியரை கெடுத்துவிடும் என்பதால் அஜித் தொடர்ந்து தன்னுடைய படங்களில் இந்த மாதிரி விஷயங்களை ஆரம்பத்திலேயே இயக்குனர்களிடம் தவிர்க்கச் சொல்லி விடுவாராம். இதை சமீபத்தில் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.

Trending News