வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ போன்றவை வெளியாகி படம் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. தற்போது படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கிறார்கள்.
படம் விரைவில் வெளியாக உள்ளதால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் வேண்டி தணிக்கைக்குழுவினருக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து வலிமை படத்தை பார்த்த தணிக்கைக்குழு படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுமட்டுமல்ல வலிமை படத்தின் பட்ஜெட் குறித்த ஒரு சில தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ரூபாயாம். அதில் தயாரிப்பு செலவு சுமார் 60 கோடி எனவும், சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் சுமார் 90 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதவிர சம்பளம் உள்ளிட்ட விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி நடிகர் அஜித்திற்கு சம்பளமாக 70 கோடியும், இயக்குனர் வினோத்திற்கு 4 கோடியும், நடிகை ஹூமா குரேஷிக்கு 1 கோடியும், வில்லன் கார்த்திகேயாவிற்கு 60 லட்சமும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு 1.25 கோடியும், ஒளிப்பதிவாளர் ஷாவிற்கு 1 கோடியும், ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனுக்கு 1.40 கோடியும் இதர நடிகர்களுக்கு 10 கோடி என மொத்தமாக சம்பளத்திற்கு மட்டும் 90 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாம்.
இவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் எந்த அளவிற்கு வசூல் பெறும் என்பது படம் வெளியானால் மட்டுமே தெரியவரும். இருப்பினும் தற்போதே வலிமை படத்தின் தியேட்டரிகல் உரிமையை பைனான்சியர் மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் சுமார் 62 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது லாபமா அல்லது நஷ்டமா என்பது படம் வெளியானால் மட்டுமே தெரியவரும்.