திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஜித்தை நம்ப வைத்து ஏமாற்றிய சிம்ரன்.. காரணம் இதுதான்

தல அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவரை நம்ப வைத்து சிம்ரன் ஏமாற்றி விட்டதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி சினிமாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தல அஜித்தை ஏமாற்றும் அளவுக்கு சிம்ரனுக்கு என்ன நடந்தது எதற்காக அந்த வேலையைச் செய்தார் என்பதை எல்லாம் பார்ப்போம்.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் தல அஜித். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித்தின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில் வருகிற பொங்கலுக்கு வலிமை படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்குதான் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க தல அஜித் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் முன்னணி இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்தார். அப்படியே அவருடைய கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது தான் வாலி. எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து பட்டையை கிளப்பிய திரைப்படம்.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அஜித்தை நடிகை சிம்ரன் ஏமாற்றியதாக ஒரு தகவலை வலைபேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர். அன்றைய காலகட்டங்களில் அஜித்தை விட அதிக படங்களில் நடித்து வந்த நடிகை தான் சிம்ரன்.

இதனால் பல படங்களுக்கு தேதி கொடுத்துவிட்டு எந்த படத்தில் நடிப்பது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரம் அது. திடீரென மணிரத்தினம் படத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் அது வாலி படத்தால் கெட்டு விட்டதாக அஜித்திடம் புலம்பியுள்ளார் சிம்ரன். இதைப் பார்த்த அஜித் தன்னால் இன்னொருவரின் கேரியர் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக படக்குழுவினரிடம் கூறி இரண்டு வாரங்கள் படப்பிடிப்பை தள்ளி வைத்து விட்டாராம்.

பிறகு பார்த்தால் சிம்ரனுக்கு மணிரத்தினம் படத்தில் இருந்து அழைப்பு வரவில்லை எனவும் அவர் மற்ற படங்களுக்கு டேட் கொடுத்ததால் தான் இந்த படத்தில் இருந்து எப்படியாவது விலக வேண்டும் என இந்த நாடகத்தை நடத்தி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அஜித் மட்டுமில்லாமல் படக்குழுவே செம அப்செட்டில் இருந்ததாம்.

Trending News