தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பை தாண்டி பன்முகத்திறமை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
தொடர்ந்து தனது திறமைகள் மூலம் அவ்வப்போது ஏதாவது ஒரு சாதனை படைத்து வருகிறார். சமீபத்தில் கூட துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்று தங்கப் பதக்கமும் பெற்றார்.
சென்னை ஏரோநாட்டிக்கல் மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்த அஜீத் அப்போது தக்க்ஷா என்ற ஒரு குழு அமைப்பை ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குயின்ஸ்லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் கலந்து கொண்டு உலகத்திலேயே இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
அப்போது அஜித்திற்கு பல தரப்பட்ட மக்களும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது அதே தக்க்ஷா குழு நெல்லை மற்றும் பல மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு கண்காணிப்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி அஜித் ரசிகர்களால் பேசப்பட்டுபட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முழு வீடியோ பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.