தல அஜித்தின் குணம் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். இவர் செய்யும் உதவிகள் வெளிப்படையாக தெரிவதில்லை, மற்றவர்களின் பாராட்டை அஜித்தும் விரும்புவதும் இல்லை. ஒரு சில நடிகர்கள் உதவி செய்தால் அதனை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதும், பெருமையாக கூறிக் கொள்வதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆனால் தல அஜித் இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் உதவி செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு இடத்திலும் உதவி செய்ததை அவர் வெளி காட்டியதில்லை. இதிலே தெரிகிறது அஜித் எளிமையான மனிதர் என்பது.
ஹைதராபாத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருந்த தல அஜித் கிடைத்த இடைவெளியில் பைக்கிலேயே வாரணாசி வரை சென்றுள்ளார். அப்போது ரோட்டு கடையில் அஜித் சாப்பிட்டுள்ளார். அந்த கடையில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
அந்த சிறுவன் அஜித்தை பார்த்தவுடன் ஆட்டோகிராப் கேட்டுள்ளான். அப்போது அஜித் ஏன் நீ வேலை செய்கிறாய், படிக்கவில்லையா என கேட்டபோது, கொரோனாவினால் எங்கள் குடும்பம் மிகப்பெரிய வறுமையை சந்தித்துள்ளது. அதனால் பள்ளிக்கூடத்தில் பீஸ் கட்ட முடியவில்லை என கூறியுள்ளார்.
இதனை கேட்ட அஜித் படிப்பு செலவிற்கு உதவிசெய்ய முன்வந்துள்ளார். மேலும் அஜித் மேனேஜரிடம் இந்த சிறுவனின் படிப்பிற்கு உதவி செய்யுங்கள் என கூறி ஒரு லட்சம் வரை உதவி செய்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
உதவி செய்வது பெரிதல்ல, ஆனால் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வது தான் பெரியது. இதன்மூலம் தல அஜித் மிக எளிமையான மனிதர் என்பது இந்த தகவலிலேயே தெரிகிறது.
