1992-ல் வெளியான தல அஜித் குமார் நடித்த அமராவதி எந்த ஒரு ரசிகராலும் மறந்துவிட முடியாது ஏனென்றால் தல அஜித்திற்கு அறிமுகம் செய்த அகரமே இந்த அமராவதி தான். இன்றைய காலத்தில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தல அஜித் குமார்.
ஆரம்பத்தில் பல்வேறு இன்னல்களை திரைத்துறையில் கண்டிருந்தாலும் தனக்கு விருப்பமான திரையை விட்டு வெளியேற விரும்பாமல் இன்று வரை பயணிப்பதாலோ என்னவோ எத்தனை தோல்விகளை கண்டபோதும் தலயின் ரசிகர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே உள்ளது.
தல அஜித்தை வைத்து முதல் படம் தந்த இயக்குனர் செல்வாவை சமீபத்தில் சந்திக்க நேர்நதது அரவிந்த்சாமி நடிப்பில் வணங்காமுடி படப்பிடிப்பில் பிசியாக இருந்தவருக்கு நம்மோடு பகிர்ந்துகொள்ள சிறிதளவே நேரமிருந்தது.
அச்சமயத்தில் அவர் கொடுத்த சில மதிப்புமிக்க விடயங்களை செய்தியாக பதிவிட்டுள்ளோம். தல அஜித்தை அறிமுகம் செய்த அதே தருணத்தில் இயக்குனர் செல்வாவோ கொஞ்சம் செல்வாக்கு மிகுந்த இயக்குனர் தான்.
அவரைத்தேடி சில தயாரிப்பு நிறுவனங்களும் சில தயாரிப்பாளர்களும் வந்து செல்வது வழக்கமே. ஆனாலும் தன்னை ஒரு உயரத்திற்கு கொண்டு செல்ல முற்படவில்லை என தல வருத்தப்படலாம். ஆனாலும் எனது தரப்பில் இருக்கின்ற பதிலோ தல அஜித்தை கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என்பதல்ல.
என்னை நாடி வந்த தயாரிப்பாளர்களோ அன்றைய சூழலில் அஜித்தை வைத்து படம் எடுக்கிறேன் என்றாலே ஏற இறங்க பார்த்ததுண்டு காரணம் அப்போது அவரால் அவர்கள் போடும் பணத்தை மீட்டு தர முடியும் என தயாரிப்பாளர்கள் முழுமையாய் நம்பவில்லை.
அதற்காக தான் அவரை ஒதுக்க வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக கூறினார். மேலும் இப்போது உச்சத்தில் இருக்கும் அவருக்கு புரிந்திருக்கும் என்றும். கிரீடம் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதிலிருந்த ரௌடி க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் அந்த படத்தை இயக்கவில்லை என்றும் கூறினார். மேலும் கடைசியாக தன் மனைவின் மரண செய்தி கேட்டு தல மெசேஜ் செய்ததாக கூறினார்.