Ajith Kumar: அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களே பெருமைப்படும் அளவுக்கு செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே துபாயில் இந்திய கொடியுடன் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றது பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதும் அளிக்கப்பட்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பத்ம விருதுகள் நேற்று இரவு வெளியானது.
நாட்டின் மிக உயரிய விருது
இதில் சினிமா துறையில் சிறந்து விளங்குவதற்காக நடிகர் அஜித்குமாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விருதை மார்ச் மாதத்திற்குள் குடியரசு தலைவர் கையால் அஜித் வாங்க இருக்கிறார். தன்னை தல என்று, கடவுளே என்று எல்லாம் அழைக்கக்கூடாது என தன்னுடைய ரசிகர்களுக்கு கடிவாளம் போட்டார்.
இனி அவருடைய ரசிகர்கள் காலரை தூக்கிக் கொண்டு பத்மஸ்ரீ அஜித்குமார் என்று அழைக்கப் போகிறார்கள்.
சினிமாவில் கோடி கணக்கில் சம்பாதித்த போதும் தன்னுடைய பேஷனை விட்டுவிடக் கூடாது என இந்த வயதில் உடல் எடையை குறைத்து சொந்தமாக கார் பந்தய குழு நிறுவினார்.
18 வயதில் தனக்கு ஸ்பான்சர் பண்ண யாருமே இல்லாததால் கார் பந்தயத்தில் இருந்து ஒதுங்கியதாக ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இன்று ஒரு கார் பந்தயக் குழுவிற்கு உரிமையாளராக இருக்கிறார். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வார்கள். அது அஜித்தின் விஷயத்தில் ஒரு பெரிய பாடமாகவே நமக்கு புரிந்து விட்டது.