வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அதிரடி முடிவு எடுத்த அஜித், கமல்.. ஆட்டம் காண போகும் தந்திர வியாபாரம்!

Ajith Kumar: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அது இந்த இன்றைய கால சினிமா பிசினஸுக்கு சரியாக பொருந்தும். இப்போதைய சினிமா வியாபாரம் என்பது நரி தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும்.

படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் உடனே அந்த படத்தை மக்கள் பார்ப்பதற்காக அல்லது நெகட்டிவ் விளம்பரங்களை அள்ளித் தெளித்து விடுகிறார்கள். மேலும் இந்த ஹீரோவுக்கு இவர் தான் போட்டி, இவரை விட இந்த ஹீரோவின் படம் வசூலில் சாதனை செய்ய வேண்டும் என்ற மாயவிம்பத்தையும் உருவாக்கி விடுகிறார்கள்.

அதிரடி முடிவு எடுத்த அஜித், கமல்

சில நடிகர்கள் இந்த தந்திர வியாபாரத்திற்கு உடன்படுகிறார்கள். உடன்பாடு இல்லாத நடிகர்கள் போட்ட பணத்தை எடுப்பதற்காக சைலன்ட் மோடில் இருந்து வருகிறார்கள். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இடையே நடக்கும் போட்டி தான் இன்றைய சினிமா பொருளாதாரத்தை வளர்த்து விடுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு எந்த போட்டியும் வேண்டாம், எங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு பெயர்கள் கூட வேண்டாம் என நடிகர்கள் ஒதுங்கி வருவது பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக இருந்து வரும் விஜய் சினிமாவுக்கு டாட்டா காட்டி கிளம்பப் போகிறார்.

விஜய் படம் யாருடைய படத்துடன் மோதும், விஜய் படத்தின் வசூலை விட அதிகமாக குறைவாய் என்பதுதான் கடந்த பத்து வருடங்களாக பெரிய போட்டியாக இருந்து வருகிறது. அதன் பின்னர் ரஜினிக்கு என்று ஒரு போட்டிக்கு ஒரு ஆள் வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கிளப்பி விட்டு யார் சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்க இந்த நடிகர்களின் ஆதரவாளர்கள் போராடி வருகிறார்கள்.

நான்தான் சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்த்தே தன் வாயால் பாடி ஆடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே என்னை தல என்று யாரும் கூப்பிடக்கூடாது என அஜித் சொல்லியிருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது கமலஹாசன் என்னை உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் என அந்த பட்டத்தை துறந்து இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஜினி தன்னுடைய அடுத்த படங்களில் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்வாரா, இல்லை அப்படி சொல்லாமல் அவர் விட்டு விட்டால் சினிமா பிசினஸ் என்னவாகும் என்பதுதான் இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

Trending News