புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எஸ் ஜே சூர்யா பார்த்து தப்புக்கணக்கு போட்ட அஜித்.. பாஸ் இன்னிக்கு இவர்தான் பெரிய ஆளு

அஜித் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனிடையே இவர் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் நடிகரான எஸ் ஜே சூர்யா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அஜித் எஸ் ஜே சூர்யா பற்றி பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

1999 ஆம் ஆண்டு தல அஜித் சிம்ரன் நடிப்பில் உருவான வாலி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம்பிடித்தவர் எஸ் ஜே சூர்யா. இந்த திரைப்படம் பிரம்மாண்டமான ஹிட் அடைந்த நிலையில் இதைத்தொடர்ந்து தளபதி விஜய்யின் குஷி படத்தையும் இயக்கி அசத்தினார்.

இதனையடுத்து எஸ்ஜே சூர்யா கண்டிப்பாக பல திரைப்படங்களை இயக்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென கதாநாயகனாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே இது குறித்து சில வருடங்களுக்கு முன் அஜித் எஸ் ஜே சூர்யா பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் தனக்கு எஸ் ஜே சூர்யாவிடம் பிடித்தது, அவரது இயக்கம் என்றும் அவரை நான் அறிமுகம் செய்து வைத்ததற்காக மிகவும் பெருமைப்படுவதாகவும், அவர் கண்டிப்பாக மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார் என தெரிவித்தார். மேலும் தற்போது எஸ்ஜே சூர்யா நடித்து வருவது எனக்கு வருத்தமாக உள்ளது எனவும் ஒரு நல்ல இயக்குனர் ஏன் நடிக்க வேண்டும் என்றும் அஜித் தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எஸ் ஜே சூர்யா, வில்லன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். இவரின் நடிப்பை பார்த்தா அஜித் வருத்தப்பட்டார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பொதுவாக தல அஜித் யாரைப்பற்றி கூறினாலும் அவரின் கணிப்பு சரியாக தான் இருக்கும், ஆனால் முதன்முறையாக எஸ் ஜே சூர்யா பற்றி அஜித் நடிப்பு செட்டாகவில்லை என கூறியது யாராலும் ஏற்க முடியாத விஷயமாக உள்ளது. இதனிடையே தற்போது எஸ் ஜே சூர்யா திரைப்படங்கள் இயக்குவதற்கும், நடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி மேலும் எஸ் ஜே சூர்யா உயர்வார் என கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News