சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிஸியாக இருந்தாலும் நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. என்ன செய்தார் தெரியுமா?

தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். என்னதான் மிகவும் பிசியாக நடித்து வந்தாலும் தனது நண்பருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தவறவில்லை.

ஆமாங்க, நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர் தான் நடிகர் விமல். இவருக்குதான் தற்போது நடிகர் விஜய் சேதுபதி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்படி என்ன சர்ப்ரைஸ் என்று தானே கேட்கிறீர்கள்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி போலவே கூட்டத்தில் ஒருவராக இருந்து பின்னர் பசங்க என்ற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் விமல். அதனை தொடர்ந்து களவாணி என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து வாகை சூடவா, மன்னர்வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்த விமல் தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். களவாணி படத்தில் நடந்தது போலவே இவரது நிஜ வாழ்க்கையிலும் வீட்டை விட்டு ஓடி சென்று தான் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பலரது பாராட்டை பெற்றிருந்தார்.

vijay-sethupathy-vimal
vijay-sethupathy-vimal

இந்நிலையில் தான் நடிகர் விமல் சமீபத்தில் அவருடைய மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆச்சரியம் அளிக்கும் விதமாக விமல் மகனின் பிறந்த நாளுக்கு விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற போது நண்பர்களாக பழகி வந்த நிலையில் தற்போது வரை அந்த நட்பை மறக்காமல் அவருடைய வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்துள்ள விஜய் சேதுபதியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Trending News