கோலிவுட்டில் அனைத்து நடிகர்களும் ஆண்டுக்கு இரண்டு படங்கள் என வெளியிட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் மிகவும் பொறுமையாக நிறுத்தி நிதானமாக இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு பின்னர் அஜித் நடிப்பில் உருவாகும் படம் தான் வலிமை.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் தற்போது முழுவதும் முடிவடைந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. முன்னதாக நேர்க்கொண்ட பார்வை படத்தில் கூட்டணி அமைத்திருந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் மூலம் இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. ஆமாங்க அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் வினோத் தான் இயக்க உள்ளாராம். இப்படத்திற்கு தற்காலிகமாக தல 61 என பெயர் வைத்துள்ளனர். முந்தைய படங்களை தயாரித்தது போலவே இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளாராம்.
நடிகர் அஜித் ஏற்கனவே இயக்குனர் சிறுத்தை சிவா உடன் அடுத்தடுத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்திருந்தார். தற்போது வினோத் உடன் இணைந்து தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். எந்த ஒரு நடிகரும் ஒரே இயக்குனருக்கு இத்தனை படங்கள் கொடுப்பதில்லை. அந்த வகையில் அஜித் மற்ற நடிகர்களிடம் இருந்து சற்று மாறுபட்டு காணப்படுகிறார்.
சரி இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம். தல 61 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது கோலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். இவரின் இசை இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே படக்குழுவினர் அனிருத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.