புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் கல்லூரி படிக்கும் போதே கிங்ஸ்லி உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

நெல்சன் 2010 ஆம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார். சில காரணங்களால் இப்படம் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. நெல்சன் முதல் படமான வேட்டை மன்னன் படத்திலேயே கிங்ஸ்லி அறிமுகம் செய்திருந்தார்.

இப்படம் வெளியாகாததால் ஏழு வருடம் கழித்து கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்கள். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் கிங்ஸ்லி நடித்திருந்தார். இப்படத்தில் யோகிபாபுக்கு இணையாக கிங்ஸ்லி காமெடியில் அசத்தி இருந்தார். வசூல் ரீதியாகவும் டாக்டர் படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.

கிங்ஸ்லி டாக்டர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் காமெடியனாக நடித்து இருந்தார். தற்போது கிங்ஸ்லிக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.

இதை தவிர சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தலை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கோஷ்டி, வீட்டுல விஷேசங்க, ஆர்ஜே பாலாஜியின் படம் ஆகிய படங்களில் காமெடி நடிகனாக நடித்து உள்ளார். கிங்ஸ்லி மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பிரபலம் அடைந்தார் என பலரும் கருதலாம்.

ஆனால் கிங்ஸ்லி பல போராட்டத்திற்குப் பிறகுதான் இந்த நிலையை அடைந்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எக்ஸிபிஷன் ஆர்கனைசராக பணியாறறி வந்துள்ளார். மேலும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்துள்ளார். சினிமாவில் காமெடியானாக இருந்தாலும் நிஜத்தில் ரொம்ப கண்டிப்பாக இருப்பாராம்.

கிங்ஸ்லி சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டவர். அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தில் பப்லு பிரித்திவிராஜ், கவுண்டமணியுடன் ருக்கு ருக்கு பாடலில் குரூப் டான்ஸ் இல் கிங்ஸ்லி நடனமாடியுள்ளார். தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் கிங்ஸ்லி அஜித் படத்தில் நடனமாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

redin-kingsley
redin-kingsley

Trending News