தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தல அஜித். திரைத்துறை மட்டுமில்லாது பைக், கார் ரேசிங், ஏரோ ப்ராஜக்ட் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர் தல அஜித்.
இப்போது கொரனா ஊரடங்கு காரணமாக பல்வேறு படங்களும் அமேசான், நெட் ப்ளிக்ஸ் ,ஹாட்ஸ்டார், சோனி லைவ் போன்ற இணைய செயலிகளின் வாயிலாக ரிலீசாகி வருகின்றன.
இப்போது இந்த நிறுவனங்கள் தியேட்டரில் ரிலிசாகி வெற்றிகரமாக ஓடிய படங்களையும் தங்கள் இணைய பக்கங்களில் வெளியிட்டு வருகின்றன.
வரலாறு
தலஅஜித் டிரிபிள் ரோலில் நடித்த படம் வரலாறு இப்படத்தில் அப்பா இரு மகன்கள் என நடித்திருப்பார் தல அஜித். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட இப்படம் இப்போது சோனி லைவில் பார்க்க கிடைக்கும்.
அமர்க்களம்
தல அஜித் ஷாலினி காதல் மழையில் மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் அமர்க்களம். ரவுடியாக சுற்றித்திரியும் அஜித் அவரை திருத்தி காதலிக்க வைக்கும் ஷாலினி. காவல் துறை குடும்பத்திற்குள் இருக்கும் ஷாலினியை காதலிப்பதால் காவல்துறையால் எண்கவுண்டர் செய்ய திரியும் போலீஸ்
தல-யை கொல்ல துடிக்கும் நாசர் தல-க்காக தலை கொடுக்க வரும் ஷாலினி என அமர்க்களமான படம். இப்போது இந்த வெற்றிப்படம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும்.
மங்காத்தா
வெங்கட்பிரபு தல அஜித், திரிஷா கூட்டணியில் 2011ல் திரைக்கு வந்த படம் மங்காத்தா. அர்ஜுன் அஜித் போலீசாக உள்ளே வெளியே என தெளிவான முறையில் படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாரே விளையாடி இருப்பார் வெங்கட் பிரபு.
இந்த திரைப்படத்தின் இன்னொரு சிறப்பு தல அஜித்தின் ஐம்பதாவது படமாக அமைந்ததாகும். இப்போது வரை கொண்டாடப்பட்டு வரும் இப்படம் இப்போது
சோனி லைவ்-இல் கிடைக்கும்.
பில்லா
ரஜினி நடிப்பில் வெளியாகிய பில்லா திரைப்படத்தில் திரைக்கதையிலும் பெருமளவு மாற்றமற்று 2007ல் வெளியானது. அஜித்தின் காஸ்டியூம் ஸ்டைல் என அனைத்திலும் முக்கியத்துவம் பெற்ற இப்படம் பிரம்மாண்ட வசூலை பெற்றது. இப்போது இந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கும்.
என்னை அறிந்தால்
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தல, திரஷா, அனுஷ்கா கூட்டணியில் அமோகமாக வந்த படம் என்னை அறிந்தால். அதுவரை ஹீரோவாக நடித்த அருண் விஜயை வில்லனாக்கி அழகு பார்த்திருந்தார் ஜி.வி.எம். மாஸான தோற்றத்தில் படு மாஸாக ஓடிய இப்படம் இப்போது சோனி லைவ் மற்றும் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.
விவேகம்
சிவா அஜித் கூட்டணியின் மூன்றாவது படம் விவேகம். விருவிருப்பான சண்டைக்காட்சிகள் தொய்வறற திரைக்கதை என அடுக்கி வைக்க ஆயிரம் பிளஸ்களை கொண்டது இப்படம். ரிலீசான சில தினங்களிலேயே வசூலை வாரிச்சென்ற இந்த படம் இப்போது ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.
விஸ்வாசம்
தல, நயன்தாரா, விவேக் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. க்ளைமேக்ஸில் எத்தனை சந்தோசமாக படம் பார்த்தவரின் கண்களிலும் நீர் வார்த்தது இப்படம்.
வசூலையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரே நேரத்தில் வாரி அள்ளிய இப்படம் இப்போது அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது. தியேட்டர், டிவி என தலயின் தரிசனம் இல்லாமல் போனாலும் ஹாட்ஸ்டார் சோனி லைவ் என தினம் தினம் தல தீபாவளிதான்.