சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

அஜித்குமார் ரேசிங் அணி இணையதளம் உண்மையா? சுரேஷ் சந்திரா விளக்கம்

அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகின்றனர். அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகவுள்ளது.

அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கு தேசி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு மே 1 ஆம் தேதி அஜித்குமார் பிறந்த நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர்களின் பல்முகத் திறமை வாய்ந்த அஜித், சினிமாவில் மட்டுமல்ல, துப்பாக்கி சுடுதல், ட்ரோன், கார் ரேஸ், பைக் ரேஸ், பைக் டூர், பைக் டூர் செல்பவர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே வீனஸ் பைக் டூர்ஸ் தொடங்கி பைக் டூக் பிரியர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

அஜித்குமார் ரேசிங் இணையதளம்

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, துபாயில் உள்ள ஆட்டோ கார் ரேஸ் மையத்தில் காரை அஜித்குமார் டெஸ்ட் செய்து கொண்டிருக்கும் போது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. அஜித்குமார் ஐரோப்பிய ரேசிங் சீசனுக்கு ரெடியாகி வருவதாக சுரேஷ் சந்திரா கூறியிருந்தார்.

இதையடுத்து, உலகளவில் பிரபலமான 23 H Dubai 2025 & The European 23H Championship – Porche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். தன் அணியுடன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள், வீடியோ வைரலானது. இந்த நிலையில், அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், இது உண்மையானதா? இல்லை போலியானதா? என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், ajithkumarcarracing.com என்ற வெப்சைட் அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல. இதை புறக்கணியுங்கள். இதுபற்றிய தகவல் அதிகாரப்பூர்வ சேனலில் தான் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அஜித் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவது பற்றி கொந்தளித்த ரசிகர்கள் அந்த இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேசமயம், இதுபோல் போலி இணையதளங்களைக் களையெடுக்க அஜித் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Suresh Chandra

- Advertisement -spot_img

Trending News