திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரசிகர்களை ஏமாற்றாத அஜித்.. இவ்வளவு நடந்தும் புகழ்ந்து பேசும் பிரபலம்

கோலிவுட்டில் மிகவும் எளிமையான நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தை பிடிக்காத நபர்களே கிடையாது. அவரது ரசிகர்களை தாண்டி மற்ற ரசிகர்களும் விரும்பும் ஒரே நடிகர் என்றால் அது அஜித் மட்டுமே. இவரை புகழாத திரைபிரபலங்களே இல்லை. அந்த வகையில் தற்போது ஒரு பிரபலமும் அஜித்தை பாராட்டியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல தமிழில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் மனோபாலா தான். இவர் வெறும் நடிகர் மட்டுமல்ல இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் சமீபகாலமாக காமெடி கதாபாத்திரங்களில் அதிகளவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

இதுவரை 40 படங்களை இயக்கியுள்ள மனோபாலா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இயக்குனர் சங்க பிரச்சனையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது.

இப்படி மிகவும் முக்கியமான நடிகரான மனோபாலா நடிகர் அஜித் குறித்து மிகவும் பெருமை பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “அஜித் தனது ரசிகர்களை எப்போதும் ஏமாற்ற மாட்டார். தனது ரசிகர்களுக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அதேபோல் அவர் சுயநலத்திற்காக இதுவரை யாரையும் பயன்படுத்தியது கிடையாது. அஜித்தை போல் தமிழ் சினிமாவில் யாருமே கிடையாது. நானும் யாரையும் பார்த்தது இல்லை. அதுமட்டுமல்ல அஜித் ரீலில் சரி ரியலிலும் சரி உண்மையாக மட்டுமே இருப்பார். யாரையும் ஏமாற்ற மாட்டார்” என கூறியுள்ளார்.

அஜித்தின் வலிமை படம் வெளியாகாததால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு மனோபாலாவின் இந்த வார்த்தை ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. கொரோனா பிடியில் ரசிகர்கள் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக வலிமை படத்தை தள்ளிப் போட்டு உள்ளார். அப்படியிருந்தும் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பது போன்ற பதிவை மனோபாலா கூறியிருப்பது இன்னும் அஜித் மேல் உள்ள மரியாதையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Trending News