செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அஜித்துக்காக எழுதிய கதை.. பின்னர் ஜெயம் ரவி கைக்கு போன கதை

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்காக எழுதிய கதை ஒன்று பிற்காலத்தில் ஜெயம் ரவி நடிக்க வேண்டியதாயிற்று என பிரபல இயக்குனர் கூறியுள்ளது அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிஸ் செய்தது அப்பேர்பட்ட படம்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து இயக்குனர் பணியில் முத்திரையை பதித்தவர் அமீர். அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியம் போல் செதுக்கி வைக்கலாம் தமிழ்சினிமாவில் அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் தரம்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அமீர் பேட்டி கொடுக்கும்போது நிறைய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அஜித் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என பார்த்து பார்த்து எழுதப்பட்ட ஆதிபகவன் படம் கடைசியில் ஜெயம் ரவிக்கு கைக்கு எப்படி போனது என்பதை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் ஏகப்பட்ட வெற்றிப்படங்களில் இருந்தாலும் ஆதிபகவன் படத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு. அதிலும் அந்த பகவான் கதாபாத்திரம் எல்லாம் வேற லெவல். திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்தார். ஆனால் இந்த படத்தின் கதை முதல் முதலில் அஜித்தை மனதில் வைத்துதான் எழுதினாராம் அமீர்.

வரலாறு படம் பார்த்துவிட்டு அந்த பகவான் கதாபாத்திரத்தில் தல அஜித் நடித்தால் அந்த படம் மாஸ் வெற்றிபெறும் என நினைத்த அந்த கதையை எழுதினாராம். ஆனால் திடீரென அஜித்தின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்ல ஆதிபகவன் படத்திற்கு நினைத்த பட்ஜெட் கிடைக்காமல் கடைசியில் ஜெயம் ரவியை வைத்து எடுக்க வேண்டியதாயிற்று என குறிப்பிட்டிருந்தார்.

ஜெயம் ரவியும் சும்மா சொல்லக்கூடாது தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை தரமாக செய்தார். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி எதிர்பார்த்திருந்த திரைப்படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News