திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வினோத் தெறிக்க விட்டுட்டீங்க.. வலிமை பார்த்துட்டு அஜித் சொன்ன விமர்சனம்

கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை என்பதுதான். அதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அஜித்தின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் மற்றும் வினோத் இணைந்து உருவாக்கி வந்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நினைத்தபடி முடியாமல் தள்ளி தள்ளிச் சென்று இப்போது ஒருவழியாக மொத்தமும் நிறைவடைந்து 2022 பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் ஆவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் படத்திற்கான புரமோஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் படத்தை எடிட் செய்து தல அஜித்துக்கு போட்டுக் காட்டியுள்ளார் வினோத். படத்தைப் பார்த்த அது சந்தோசத்தில் பூரித்துப் போய் விட்டாராம்.

என்னுடைய கேரியரில் இது தான் பெஸ்ட் படம் எனவும் இவ்வளவு நாட்களாக எனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது சரியான படம் எனவும் வினோத்தை புகழ்ந்து தள்ளி விட்டாராம். ஒவ்வொரு காட்சியும் நன்றாக இருப்பதாகவும் சொன்னதைவிட படம் சூப்பராக வந்துள்ளது,

சென்டிமென்ட் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நினைத்ததைவிட பிரமாதமாக வந்துள்ளது எனவும், கண்டிப்பாக இந்த படம் பந்தயம் அடிக்கும் எனவும் தெரிவித்து விட்டாராம். படத்தைப் பார்த்த அஜித் கண்டிப்பாக வினோத்துக்கு ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருள் பரிசு அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் வினோத் உடன் இணைந்து பணியாற்றுவது தல அஜித்துக்கு அவ்வளவு பிடித்துள்ளது எனவும் அவருடைய வட்டாரங்களில் செய்திகள் வெளியானது. அதனால்தான் அஜித் அடுத்த படமும் வினோத் உடன் பணியாற்றி வருகிறார். விரைவில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் 5-ஆம் தேதி அம்மா பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News