ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் ஆகப் போவதில்லை.. அதிர்ச்சியில் தியேட்டர் முதலாளிகள்

ஒரே சமயத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானால் எப்போதும் சிக்கல் தான். ஒன்னு இரண்டில் ஏதாவது ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படும் இல்லையெனில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தற்போது அப்படி ஒரு நிலைமை தான் அஜித் படத்திற்கு நடந்துள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். ஆனால் தேதி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஜனவரி 12 அல்லது 13 ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வலிமை படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியாகும் படங்களின் தேதியை அறிவித்துள்ளது. அதில் அஜித்தின் வலிமை படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

valimai
valimai

வலிமை படம் வெளியாகும் அதே தினத்தில் தான் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படமும் வெளியாக உள்ளதாம். இதில் மேலும் ஒரு சிக்கல் உள்ளது. வலிமை படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது ஜனவரி 7 ஆம் தேதி பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் வெளியாக உள்ளது.

வெறும் ஒரு வார இடைவெளியில் இரண்டு பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் என்ன செய்வது எந்த படத்தை எடுப்பது என்ற குழப்பத்தில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர். மேலும் ஒரு படம் மற்றொரு படத்தின் வசூலை பாதிக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதனால் வலிமை படத்திற்கு சிக்கல் ஏற்படும் என ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.

Trending News