புதன்கிழமை, ஜனவரி 22, 2025

வலிமை பட பாடலை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. எல்லாத்திலும் மூக்க நுளைச்ச இப்படிதான்!

தமிழ் சினிமாவில் பயங்கர எதிர்பார்ப்புடன் உள்ள படம் என்றால் அது அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் தான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மிகவும் ரகசியமாக படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர். இதனாலே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னி என்பவரும் இணைந்து பாடியுள்ளனர். ஒரு கோவில் திருவிழாவில் பாடுவது போல் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களாகவே டிவிட்டரில் பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா, போனிகபூர், அவரின் மகள் ஜான்வி கபூர் என அனைவரும் டிவிட்டரில் தொடர்ந்து இப்பாடல் பற்றி பதிவிட்டு வந்தனர்.

valimai song troll
valimai song troll

எனவே, வேதாளம் படத்தில் அஜித்துக்கு அமைந்த ‘ஆலுமா டோலுமா’ பாடல் போல இந்த பாடலும் துள்ளலாக இருக்கும் என அஜித் ரசிகர்களும் நெட்டிசன்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

valimai-troll
valimai-troll

மேலும் இசையும் நன்றாகவே இல்லை. விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் வரிகளும் நன்றாக இல்லை என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இசை மட்டும்தான் வருகிறது. பாடல் எங்கே இருக்கிறது? என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

valimai-troll
valimai-troll

யுவன் இசை என்றாலே தனி வரவேற்பு இருக்கும். யுவனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா ஏமாற்றிவிட்டதாக மீம்ஸ் போட்டு பலரும் கிண்டலடித்து வருகின்றனர். ஒருபுறம் இந்த பாடலை கேலி செய்து வந்தாலும், மற்றொருபுறம் இந்த பாடல் வீடியோ யுடியூப்பில் வெளியாகி தற்போது வரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith-fans
ajith-fans
valimai-troll
valimai-troll

Trending News