புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

விஜய்யை டவுன் பண்ண கருவியாகும் அஜித்குமார்.. ஒரே ட்வீட்டால் வெளியான குட்டு!

Vijay: நடிகர்கள் விஜயும், அஜித்குமாரும் சினிமாவில் சமகாலத்து போட்டியாளர்கள். படங்களுக்குள்ளே போட்டியிருந்தாலும், ரசிகர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இருந்தாலும் இவர்கள் இரண்டு பேருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது ஊரறிந்தது.

ஆனால் இதைத் தாண்டி போட்டி என்பது இவர்கள் இரண்டு பேருக்குள்ளும் இருக்கிறதோ என்ற சந்தேகம் லேசாக தலை தூக்கி இருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் தான். கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு படம் நேருக்கு நேர் மோதிய போதே இருவருக்குள்ளும் ஏதாவது சலசலப்பு இருக்குமோ எனத் தோன்றியது.

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இருவரும் நல்ல நட்பில் இருக்கிறார்கள் என்பதை வெங்கட் பிரபு உறுதிப்படுத்தினார். ஆனால் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாடு நடைபெறுவதற்கு முன்னான ஒரு சில நாட்களாக இருக்கட்டும், நடந்து முடிந்த பிறகாவது இருக்கட்டும் என்னமோ சரியில்லையே என எல்லோருக்கும் தோன்றுகிறது.

ஒரே ட்வீட்டால் வெளியான குட்டு!

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நெருங்கும் வேளையில் அஜித் குமார் தான் கார் ரேசிங் விளையாட்டிற்கு திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அவருடைய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகியது.

மாநாடு நடந்த நாளாக இருக்கட்டும், அது பின்னராக இருக்கட்டும் கார் ரேசிங் சம்பந்தப்பட்ட அஜித்குமாரின் புகைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. இது விஜயின் மாநாடு சம்பந்தப்பட்ட செய்திகளை கொஞ்சம் டவுன் பண்ணுவதாக அமைகிறது என்பது இணையவாசிகளின் விமர்சனம்.

இது அஜித் தெரிந்து செய்கிறார் அல்லது அவருடைய போக்கில் தனக்கு பிடித்ததை செய்கிறாரா என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் நேற்று மெனக்கெட்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் விளையாட்டு சம்பந்தமாக திமுக அரசு எடுத்து வைக்கும் நிறைய விஷயங்களுக்கு அஜித்குமார் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டே இருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இதை பற்றி பேசிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விஜய்க்கு கோபம் வர வேண்டும் என்று தான் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக விமர்சித்திருக்கிறார்.

Udhayanidhi
Udhayanidhi
- Advertisement -spot_img

Trending News