திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025

விடாமுயற்சி சும்மா ட்ரெய்லர் தான், அடுத்து வெளியாக போகும் அதிரடி அப்டேட்.. அட! அஜித்தின் ஆஸ்தான வில்லனும் இருக்காராமே

Ajith Kumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படம் பொதுவான சினிமா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறது.

அஜித் மாஸ் காட்ட வேண்டும் பஞ்ச் டயலாக் பேச வேண்டும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மட்டும்தான் இந்த படம் கொஞ்சம் ஏமாற்றம் என்று சொல்ல வேண்டும்.

வெளியாக போகும் அதிரடி அப்டேட்

அஜித் குமார் குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு குறுகிய கால இடைவெளியே கார் ரேஸுக்காக எடுத்துக் கொள்ளப் போகிறார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.

அதன் பின்னர் அஜித் யாருடன் படம் பண்ண போகிறார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. தற்போது அதற்கு பதில் கிடைத்திருக்கிறது.

அஜித் அடுத்து விடாமுயற்சி இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தான் இணைய இருக்கிறார். விடாமுயற்சி படத்தை அவர் எடுத்துக் கொடுத்த விதம் அஜித்துக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டதாம்.

இந்த கதை மக்களுக்காக அஜித் விரும்பி நடித்த கதை. அடுத்து மகிழ் திருமேனியின் ஸ்டைலில் அஜித் நடிக்க இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் ஸ்டைலாக மோதிய விக்டர், அதாவது அருண் விஜய் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

Trending News