புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்தடுத்து நண்பர்களின் இழப்பு.. மரண பயத்தில் அஜித் செய்த விஷயம்

Ajith: அஜித் தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். அவருடைய நீண்ட கால நண்பரான வெற்றி துரைசாமியின் மரணம் அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. நடிப்பை தாண்டி போட்டோகிராபி, சாகசங்கள் என அஜித்துக்கு பல விஷயங்களில் ஆர்வம் உண்டு.

வெற்றி துரைசாமியும் அப்படிப்பட்டவர் என்பதாலேயே இவர்களுடைய நட்பு குடும்பத்தோடு நெருங்கி பழகும் அளவிற்கு பலப்பட்டிருக்கிறது. அதனாலயே நேற்று அஜித் ஷாலினியுடன் சைதை துரைசாமி இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார். அந்த அளவுக்கு வெற்றி அஜித்துக்கு ஸ்பெஷலான ஒரு நண்பராக இருக்கிறார்.

அதேபோன்று அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் ஒருவராக இருந்தவர்தான் கலை இயக்குனர் மிலன். இவர் அஜித்தின் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். மாலை நேரங்களில் அஜித் பார்ட்டி பண்ணும் போது மிலனும் கட்டாயம் அதில் இடம்பெறும் ஒருவராக இருப்பார்.

Also read: அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது!. அனிகாவுக்கே டஃப் கொடுத்த புகைப்படம் 

இப்படி அஜித்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த சோகத்தில் இருந்து அஜித் வெளிவராத நிலையில் வெற்றியின் இழப்பும் அவரை வேதனைப்படுத்தி இருக்கிறது.

அதை தொடர்ந்து தற்போது பத்திரிகையாளர் அந்தணன் அஜித் குடியை நிறுத்தியது பற்றிய ஒரு விஷயத்தை வெளியிட்டுள்ளார். அதாவது மிலனின் இறப்புக்கு குடி தான் காரணம் என்று அஜித்துக்கு எப்போது தெரிந்ததோ அன்றிலிருந்து அவர் குடிப்பதை விட்டு விட்டார்.

அந்த அளவுக்கு இந்த இறப்பு அவருக்கு வருத்தத்தையும் மரண பயத்தையும் காட்டி இருக்கிறது. அதேபோன்று விடாமுயற்சி படப்பிடிப்பு இல்லாவிட்டால் அஜித்தும் வெற்றியுடன் இந்த பயணத்தில் இருந்திருப்பார் என்றும் அந்தணன் கூறியுள்ளார்.

Also read: கல்யாணம் பண்ண மாட்டோம்னு வெட்டி சபதம் போட்ட 5 படங்கள்.. ஜொள்ளு விட்டு முதல் ஆளாய் அஜித் பண்ணிய காதல்

Trending News