தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் பல துறைகளிலும் திறமையாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கூட பல பதக்கங்களை வென்றிருந்தார்.
அது மட்டுமல்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் கில்லாடியான இவர் பல ரேஸ் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். கிடைக்கும் நேரமெல்லாம் பைக்கில் சுற்றுவது தான் இவருடைய பொழுதுபோக்கு. அந்த வகையில் தற்போது துணிவு பட சூட்டிங்கில் இருக்கும் இவர் பைக்கில் ஊர் சுற்றும் போட்டோக்கள் அனைத்தும் வெளியாகி வைரலானது.
Also read:துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் பிக் பாஸ் ஜோடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் அஜித் திறமையை சோதிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் ஒருவர் பேசி இருப்பது ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. பிரபல சேனலின் பத்திரிக்கையாளரான முக்தார் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லாவ பேட்டி எடுத்தார். இவர் அஜித்துடன் பல போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார் சொல்லப்போனால் இந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியனும் இவர்தான்.
அவர் அஜித் பற்றி பல தகவல்களை அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அப்போது அவர் அஜித்துக்கு சில டிப்ஸ் கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அஜித்தும் அவரும் பங்கேற்ற போட்டிகளில் அவர்தான் வெற்றி பெற்றதாகவும், அஜித் இதுவரை ரேஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதில்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட முக்தார் அப்பொழுது அஜித் உங்களிடம் தோற்றுவிட்டாரா என்று நக்கலாக கேட்டார்.
Also read:முதல் நாள் கலெக்ஷனில் மிரட்டிய 10 திரைப்படங்கள்.. முதலிடத்தை தக்க வைத்துள்ள அஜித்
மேலும் சினிமாவில் அஜித் தல என்றால் ரேசில் நீங்கள்தான் தல என்று அஜித்தை சீண்டும் தொனியில் பேசினார். இதை கேட்ட அலிஷா அப்படியெல்லாம் கிடையாது என்று பதறிப் போய் பதில் சொன்னார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தேவையில்லாமல் அஜித்தை வம்புக்கிழுக்கும் விதமாக பேசிய அந்த பத்திரிக்கையாளரின் மேல் அஜித் ரசிகர்கள் கொலைவெறியில் இருக்கின்றனர். மேலும் அஜித்தின் திறமை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் சேனலின் டிஆர்பிக்காக தேவையில்லாமல் எதையாவது பேசி பேட்டி எடுக்காதீர்கள் என்று அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also read:பொன்னியின் செல்வன் படத்துக்கு வந்த ஆபத்து.. ஏற்கனவே விஜய், அஜித் படத்தில் நடந்த அராஜகம்