புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பகாசூரன் படத்தில் நடிக்க மறுத்த அஜித் மச்சான்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

தான் இயக்கும் படங்களின் மூலம் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பும் இயக்குனர் மோகன் ஜி செல்வராகவனை வைத்து இயக்கிய பகாசூரன் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே செல்வராகவன் சாணி காகிதம், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்ததால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

ஆனால் படம் வெளிவந்த பிறகு கடும் விமர்சனங்களை சந்திக்க தொடங்கி இருக்கிறது. படத்தில் இயக்குனர் பிற்போக்குத்தனமான சிந்தனைகளை காட்சிப்படுத்தி இருப்பதாக பல விவாதங்கள் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் படத்தில் செல்வராகவனின் நடிப்பு ரசிகர்களை கவரவில்லை என்ற விமர்சனமும் பெருகி வருகிறது.

Also read: லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

அந்த வகையில் செல்வராகவன் நடித்த கதாபாத்திரத்தில் இயக்குனரின் ஆஸ்தான நடிகர் ரிச்சர்ட் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் மோகன் ஜி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த ருத்ர தாண்டவம், திரௌபதி ஆகிய திரைப்படங்களில் ரிச்சர்ட் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் காரணமாகவே இயக்குனர் முதலில் ரிச்சர்டை தான் இந்த படத்தில் நடிக்க வைக்க கேட்டிருக்கிறார். ஆனால் சில விஷயங்களை காரணம் காட்டி அவர் இப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். அப்படி அவர் மறுத்ததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் சிவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறது.

Also read: இருக்கும் இடம் தெரியாமல் போன விஷால், பரத்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட பரிதாபம்

இன்னும் சொல்லப்போனால் கோவிலில் சேவகம் செய்யும் ஒருவராக தான் செல்வராகவன் இதில் காட்டப்பட்டிருப்பார். இதன் காரணமாகத்தான் ரிச்சர்ட் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று நைசாக நழுவி விட்டாராம். இப்படி ஒரு தகவல் தான் தற்போது மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த விஷயம் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி ஒரு காரணத்தை காட்டி நல்ல வாய்ப்பை ரிச்சர்ட் இழந்து விட்டாரே என்ற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அவர் மட்டும் இதில் நடித்திருந்தால் படம் நிச்சயம் வேற லெவலில் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கும். மேலும் ஒரு நடிகர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். இப்படி எல்லாம் காரணம் காட்டி ஒதுங்கினால் வாய்ப்பு இல்லாமலேயே போய்விடும் என்று அஜித் மச்சானை பற்றி திரையுலகில் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Also read: சம்பள விஷயத்தில் பெரிய மனுஷனாக நடந்து கொண்ட ரஜினி.. அஜித், விஜய் தயவு செஞ்சு கத்துக்கோங்க

Trending News