திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் இடத்தை சல்லி சல்லியாக உடைக்கும் அஜித்.. அடுத்தடுத்து நடக்க போகும் எதிர்பாராத சம்பவங்கள்

கோலிவுட் சினிமாவின் இரு பெரும் துருவங்கள் என்றால் அது நடிகர் அஜித் மற்றும் விஜய் தான். ஆரம்ப காலங்களில் இவர்கள் இருவர் இடையே பயங்கரமான போட்டிருந்தது. படத்தின் வசனங்களில் கூட வெளிப்படும். ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அஜித் இந்த போட்டியில் விலகியே இருந்தார். அவரை பெரிதாக பொது நிகழ்ச்சிகளில் பார்க்க கூட முடியாது.

ஆனால் தற்போது அஜித் பழைய பார்முக்கு வந்து விட்டார். எப்போதும் இல்லாத உத்வேகத்துடன் சினிமாவில் ரொம்பவும் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு காரணம் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பொங்கல் ரிலீஸ் ஆக வந்த துணிவு படத்தின் வெற்றி தான்.

Also Read: அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

அஜித்தை பொறுத்த வரைக்கும் எப்போதும் படம் நடிப்பதை தவிர வேறு எதிலும் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார். மேலும் படத்திற்காக யாருடனும் போட்டி போடுவதையும் இவர் தவிர்த்து வந்தார். சினிமாவில் இவர் யாரையுமே கண்டு கொள்வதில்லை. படம் வெற்றியோ, தோல்வியோ அவருடைய ரசிகர்கள் எப்போதும் அவர் பக்கம் இருந்தனர்.

ஆனால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு இந்த துணிவு படத்தில் விஜய்யுடன் மோதியே ஆக வேண்டும் என எண்ணத்தில் ரொம்பவும் உறுதியாகவே இருந்தார் அஜித். இதற்காக மற்ற படங்களுக்கு செய்யாத பல வேலைகளை செய்தார். துணிவு படத்தின் மூலம் தன்னுடைய ரசிகர்களின் எழுச்சியையும் அஜித் பார்த்து விட்டார்.

Also Read: விக்னேஷ் சிவன் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போட்ட அஜித்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் AK63

அதனால் இனி சினிமாவில் சும்மாவே இருப்பது வேலைக்கு ஆகாது, ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார். அதற்காக ரசிகர்கள் மன்றத்தை ஆரம்பிக்காமல், படங்களின் ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா என்று ரசிகர்களை குஷிப்படுத்தலாம் என்று நடிகர் அஜித் தற்போது முடிவெடுத்திருக்கிறார்.

எந்த போட்டியும் இல்லாமல் தனி காட்டு ராஜாவாக சுற்றி வந்த விஜய்க்கு இது கொஞ்சம் பேரதிர்ச்சி தான். இனி அஜித்தை முந்தியே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தில் வேகமாக ஓட வேண்டும். அஜித் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இனி உண்மையாகவே இவர்கள் இருவருக்குள்ளும் பரபரப்பான போட்டி ஆரம்பமாகி இருக்கிறது. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தான்.

Also Read: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. ஆட்டநாயகன் என நிரூபித்த அஜித்

Trending News