திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படம் ஆரம்பிக்கும் முன்பே அதிர்ச்சியை கிளப்பிய அஜித்.. பல சிக்கலில் மாட்டி தவிக்கும் மகிழ் திருமேனி

நடிகர் அஜித்திற்கு துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இது அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய கனவாகவும் இருக்கிறது. ஆனால் அவருடைய 62 ஆவது படம் கடந்த வருடத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுவரை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

இதே போன்று தான் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அவருடைய ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்தார்கள். அப்படி இல்லாமல் துணிவு திரைப்படத்தை பரபரப்பாகவும், வேகமாகவும் கொண்டு சென்றது அந்த படக்குழு. ஆனால் அவருடைய அடுத்த படமான விடாமுயற்சி, வலிமை படத்தை போலவே இடியாப்ப சிக்கலாய் தான் இருக்கிறது.

Also Read:கடைசியாக அஜித் எதிர்பார்த்ததை செய்ய போகும் மகிழ்திருமேனி.. ஏகே ஓட கேம் இனிமேதான்

படத்தின் இயக்குனர் யார் என்பது முடிவாவதற்கு பல மாதங்கள் இழுத்தடித்து விட்டது தயாரிப்பு நிறுவனம். அதன் பின்னர் இயக்குனர் மகிழ்திருமேனி தான் இயக்கப் போவதாக உறுதியான அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி அன்றைய நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுவே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துவிட்டது.

இருந்தாலும் படத்தில் யார், யார் நடிக்க இருக்கிறார்கள், அஜித்துக்கு கதாநாயகி யார் என்பது இன்றுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் தான் தற்போது அஜித் ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கி போடும் விதமாக அஜித் அடுத்த சுற்று பயணமாக ஆஸ்திரேலியா கண்டத்திற்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read:வேர்ல்ட் டூருக்கு தயாராகும் அஜித்தின் மிரளவிடம் புகைப்படம்.. AK மேனேஜர் வெளியிட்ட ட்ரெண்டிங் ட்விட்டர் பதிவு

ஆனால் சமீபத்திய தகவலின் படி அஜித் குமார் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் . இந்த படத்தை மொத்தம் 70 நாட்களில் எடுத்து முடிக்க பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்த 70 நாட்களில் நடிகர் அஜித்குமாரின் மொத்த கால்ஷீட் 40 நாட்கள் தானாம். விடாமுயற்சி படப்பிடிப்பானது இந்த மாதிரி இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது.

இருந்தாலும் ஒரு இயக்குனராக மகிழ்திருமேனிக்கு இது கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலை தான். குறுகிய காலத்திலேயே கதாநாயகி மற்றும் சக நடிகர்களை அவர் தேர்வு செய்ய வேண்டும். 40 நாட்களுக்குள் அஜித்தின் போர்ஷன் முழுவதையும் முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் வேர்ல்ட் டூர் செல்ல ஏதுவாக இருக்கும். இதனால் இந்த படத்தின் இயக்குனர் கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைமையும் இருக்கிறது.

Also Read:விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

Trending News