அடிப்படையில் மாடலான பிரபல நடிகை ஒருவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை ஓபன் ஆக ஒப்புக்கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வந்தவர் பார்வதி நாயர். பெயரிலேயே மலையாள வாசம் கொண்டவர்தான். யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் தமிழ் சினிமாவில் இவருக்குக் கிடைத்தது. முதல் படமே தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.
அருண் விஜய்க்கு மனைவியாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த படமே உலகநாயகன் கமலஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெப்சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் பார்வதி நாயர். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெள்ளை ராஜா என்ற பெயரில் வெப்சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.
![parvathy-nair-01](https://www.cinemapettai.com/wp-content/uploads/2020/01/parvathy-nair-01.jpg)
சமீபத்தில் நடிகை பார்வதி நாயர் தனது குடி பழக்கம் இருக்கிறது என்பதை கூறியுள்ளார். மேலும் தனக்கு தினமும் ஒயின் குடிக்கவில்லை என்றால் தூக்கமே வராது எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தான் இளமையாக இருக்க காரணம் ஒயின் குடிப்பது தான் பகிரங்கமாக கூறியுள்ளார். கேரளாவிலிருந்து வந்த நடிகைகள் ஒயின் குடிக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்கிறார்கள் சினிமாவாசிகள்.