திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

1000 கோடி வசூலுக்கு தயாராகும் அஜித் பட இயக்குனர்.. ராமாயணத்திற்கு சவால் விடப் போகும் மகாபாரதம்

Ajith Movie Director Ready To Collect 1000 Crores: இதிகாச படங்களின் மேல் இப்போது இருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு தனி ஆர்வம் வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வருடம் பிரபாஸ் நடிப்பில் ராமாயண காவியத்தை மையப்படுத்தி ஆதி புருஷ் வெளியானது. ஆனால் பல நெகட்டிவ் விமர்சனங்களின் காரணமாக அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஹனுமான் 300 கோடி வரை வசூல் லாபம் பார்த்தது. இப்படி புராண கதைகளின் வரவு சினிமாவில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது கூட ஹிந்தியில் ராமாயண காவியத்தை பிரம்மாண்டமாக எடுக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க தமிழில் மகாபாரதத்தை படு பிரம்மாண்டமாக இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லிங்குசாமி. அஜித்தின் ஜி, மாதவனின் ரன் என பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் துவண்டு போகாத இவர் மகாபாரதத்தை நம்பி களத்தில் குதித்துள்ளார்.

Also read: விஜயகாந்த்காக கூட வரல, உயிர் நண்பன் வெற்றிக்காக ஓடோடி வந்த அஜித்.. காட்டு தீயாக பரவும் ஃபோட்டோ

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை கோலிவுட்டில் இப்படி ஒரு பிரம்மாண்ட படம் வெளிவந்தது கிடையாது என்று சொல்லும் அளவுக்கு படத்தை எடுக்கவும் லிங்குசாமி திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதை வைத்து பார்க்கும் போதே நிச்சயம் இந்த மகாபாரதம் ஆயிரம் கோடி வசூலுக்கு தயாராகிவிடும் என்றே தெரிகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து விடலாம் .அந்த வகையில் ஷங்கர், ராஜமவுலி ஆகியோருக்கு போட்டியாக லிங்குசாமியும் களத்தில் குதித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: வெற்றி துரைசாமி மாதிரியே அதன் மீது அஜித்துக்கு இருந்த தீரா காதல்.. நண்பனுடன் வைரலாகும் புகைப்படங்கள்

Trending News