திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

KH234 – த்ரிஷா, நயன்தாரா ஓரமா போங்க.. அஜித் பட ஹீரோயினை லாக் செய்த கமல்

உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் அவருக்கென்று மீண்டும் பெரிய உத்வேகம் வந்திருக்கிறது. இந்த படத்திற்கு அடுத்து இந்தியன் 2 படத்தையும் முடித்து ரிலீஸ் செய்யும் நோக்கத்தில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். அரசியல், சினிமா என தற்போது கமல் பயங்கர பிசியாக இருக்கிறார். விக்ரம் படத்தை போல் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதுதான் தற்போது அவரின் கனவாக இருக்கிறது.

கடந்த நவம்பரில் பிறந்த நாள் கொண்டாடிய உலகநாயகன் அவர்கள் தன்னுடைய 234 வது படத்தின் அப்டேட்டையும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுத்தார். இன்னும் பெயரிடப்படாத அந்த படம் KH234 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கமல். ஏற்கனவே இவர்கள் இருவரது கூட்டணியில் நாயகன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் தற்போது இணைந்திருக்கிறார்கள்.

Also Read:10 பிரபலங்களுக்கு பல கோடி சம்பளத்தை வாரி வழங்கிய மணிரத்னம்.. முதல் மூன்று இடம் யாருக்கு தெரியுமா.?

KH234 என்ற படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் ரொம்பவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மணிரத்னமும் பொன்னியின் செல்வன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டார். இந்தியன் 2 பட வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கிறது. பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு மணிரத்தினம் இந்த படத்திற்கான அடுத்த கட்ட வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.

கமலின் அடுத்த படத்தில் அவருடன் நடிகை திரிஷா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே மன்மதன் அன்பு மற்றும் தூங்காவனம் திரைப்படங்களில் நடித்திருந்தார்கள். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் உச்சகட்ட நிலையை அடைந்திருப்பதால் கண்டிப்பாக மணிரத்னம் அடுத்த படத்தில் அவரை நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது.

Also Read:14 வருடத்திற்கு முன்பே விஜய், சூர்யாவிற்கு மணிரத்னம் கொடுத்த ஆஃபர்.. தட்டிக் கழித்து வருந்தும் 10 பிரபலங்கள்

ஆனால் தற்போது கமலுடைய 234 வது படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலனை பொறுத்த வரைக்கும் ஏனோ தானோ என்று கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகை அல்ல. தனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டுமே அவர் தலை காட்டுவார். எனவே இந்த படத்தில் இவருக்கு கண்டிப்பாக முக்கியமான ரோல் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்யா பாலன் ஏற்கனவே தமிழில் நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் வித்யா பாலன் மிகவும் பிடித்த நடிகை தான். எனவே இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே இருக்கிறது. இது பற்றி விரைவில் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:இந்தியன் பட சாதனையை முறியடிக்கும் லியோ.. 2000 பேரை குத்தகைக்கு எடுத்த லோகேஷ்

Trending News