செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த மீனா.. அந்த மாதிரி கிக் ஏற்றும் கேரக்டர் இவங்களுக்கு செட்டாகாது!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலமாக நடித்து வருபவர் தான் கண்ணழகி மீனா. குழந்தைப் பருவத்திலேயே தனது நடிப்பை தொடங்கிவிட்டார்.

நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சிவாஜியால் அறிமுகப்படுத்தப்பட்டார். எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் மிக அற்புதமாக நடித்திருப்பார்.

2011ம் ஆண்டு கடைசியாக தம்பிக்கோட்டை என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இடைவெளிக்குப் பின் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

இவர் அஜீத் குமாருடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன், சிட்டிசன் போன்ற படங்களில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில், எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட ஹிட்டடித்த வாலி படத்தில் நடிப்பதற்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சினை இருந்ததால், அதில் நடிக்க முடியவில்லை என்று வருத்ததுடன் சமிபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அஜித்குமார் அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

simran-vaali-cinemapettai
simran-vaali-cinemapettai

மீனாவுக்கு இந்த படத்தில் சிம்ரனின் கதாபாத்திரம் நடிப்பதாக வாய்ப்பு கிடைத்ததாம். சிம்ரனின் கிக் ஏற்றும் கதாபாத்திரம் அவருக்கு மட்டுமே பொருந்தும் மீனா நடித்திருந்தால் கூட எந்த அளவுக்கு செட்டாகிருக்கும் என்பது கேள்விக்குறி தான்.

Trending News