47 வயது மதிக்கத்தக்க நடிகையை அஜித்தின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளரின் மகன் காதலித்து வருவது சினிமா வட்டாரங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தையும் தயாரித்தவர் போனி கபூர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. போனி கபூரின் மகன்தான் அர்ஜுன் கபூர். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் 47 வயது மதிக்கத்தக்க பிரபல நடிகையான மலைக்கா அரோரா என்பவரை காதலித்து வருகிறாராம்.
சமீபத்தில் தன்னுடைய தங்கையின் பிறந்த நாளுக்கு கூட வராமல் அவருடன் பொழுதை கழித்துள்ளார் அர்ஜுன் கபூர். இதனால் போனிகபூர் செம கோபத்தில் இருக்கிறாராம். மேலும் அந்த மூத்த நடிகை தன்னுடைய மகனை காசுக்காக வளைத்து போட்டு விட்டார் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் பேசி வருகிறாராம்.
ஆனால் அர்ஜுன் கபூருக்கு மலைக்கா அரோரா மீது எப்படி இப்படி ஒரு அளவு கடந்த காதல் வந்தது என்றே தெரியவில்லையாம். அநியாயத்துக்கு கொஞ்சிக் குலவிக் கொள்கிறார்களாம். தன்னை விட 12 வயது மூத்தவர் என தெரிந்தும் உருகி உருகி காதலித்து வருகிறாராம்.
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், தன்னை விட 10 வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் இருக்கும்போது தன்னை விட அதிகமான வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு என எதிர் கேள்வி கேட்கிறாராம்.
எக்கேடோ கெட்டுப் போங்கள் என அவரிடம் காதல் சர்ச்சை பற்றி பேசவே யாரும் விருப்பப் படவில்லையாம். இருந்தாலும் போனிகபூர் எப்படியாவது அந்த காதலை முறித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.