வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அஜித் பட டைட்டிலை ஆட்டைய போட்ட சிரஞ்சீவி.. என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அதே போல் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. இவர் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து நடிகர் சிரஞ்சீவி மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மோகன்லாலின் படமான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்நிலையில் இன்று சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பும், மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் படத்திற்கு காட்பாதர் என தலைப்பு வைத்துள்ளனர். இத்தலைப்பு நடிகர் அஜித் படத்திற்கு வைக்கப்பட இருந்த தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான வரலாறு படத்திற்கு காட்பாதர் என்று தலைப்பு வைக்க இருந்தனர். அதன் பின்னரே வரலாறு என்று தலைப்பை மாற்றினர். தற்போது இந்த தலைப்பே சிரஞ்சீவி படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

godfather-chiranjeevi
godfather-chiranjeevi

செப்டம்பர் மாதம் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தின் ரீமேக் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Trending News