புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது!. அனிகாவுக்கே டஃப் கொடுத்த புகைப்படம் 

Veeram Movie child actress Yuvina Parthavi latest photos: கோலிவுட்டில் நடிகை மீனா, பேபி ஷாலினி போன்றவர்கள் எல்லாம் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்கள். அந்த வரிசையில் தற்போது வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை யுவினா பார்த்தவி. நாசரின் பேத்தியாக வீரம் படத்தில் நடித்ததோடு, அஜித்திடம் ‘பச்சைக் குதிரை விளையாடலாமா!’ என்று மழலை மொழியில் யுவினா கேட்பது ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வைத்தது.

இவர் வீரம் படத்தில் மட்டுமல்ல விஜய்யுடன் சர்கார், சூர்யாவுடன் மாஸ், பா. விஜய்யின் ஸ்ட்ராபெரி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை யுவினா பார்த்தவி இப்போது நெடு நெடுன்னு வளர்ந்து செம க்யூட்டாக, ஒரு இளம் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து அஜித்துக்கு கதாநாயகியாக நடித்தால் கூட ஆச்சரியம் இல்லை.

ஏற்கனவே சோசியல் மீடியாவை திணறடித்துக் கொண்டிருப்பவர் தான் அஜித்தின் ரீல் மகள் நடிகை அனிகா சுரேந்தருக்கே டஃப் கொடுக்கும் வகையில் இப்போது இளம் ஹீரோயினாக நடிகை யுவினா பார்த்தவி  உருவெடுத்துவிட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Also Read: கண்ணும் கண்ணும் பேசி ரொமான்டிக்கை தெறிக்கவிட்ட விஜய் அஜித்தின் 5 படங்கள்.. ரெண்டு பேரும் வளர்வதற்கு காரணமான காதல்

நடிகை யுவினா பார்த்தவி-யின் லேட்டஸ்ட் புகைப்படம்

முன்பு குழந்தையாக பார்த்த பலருக்கும் இவரை இவ்வளவு பெரிய பொண்ணாக பார்த்ததுமே வியக்க தான் வைக்கும். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்ததும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரது வீட்டில் வரிசை கட்டி நிற்கின்றனர்.

அதன் முதல் கட்டமாக நடிகை யுவினா பார்த்தவி ஜெயம் ரவி நடிப்பில் வரும் 16ஆம் தேதி  ரிலீஸ் ஆக இருக்கும் சைரன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

மளமளன்னு வளர்ந்து நிற்கும் யுவினா

actress-yuvina-parthavi-cinemapettai
actress-yuvina-parthavi-cinemapettai

Also Read: நடிப்பு, மிமிக்ரி என அசத்தும் மணிகண்டன் அதுலயும் கில்லியா?. குறட்டை மோகன் செய்த 5 சம்பவம்

Trending News